தமிழகத்தில் 4 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை: ஆர்டிஐ மனுவில் பதில்

தமிழகத்தில் 4 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை: ஆர்டிஐ மனுவில் பதில்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் நடை​பெறும் 10 புதிய ரயில் பாதை திட்​டங்​களில், 4 திட்​டங்​களுக்கு தலா ஒரு ரூபாய் மட்​டுமே ஒதுக்கி இருப்​பது ஆர்​.டி.ஐ மூல​மாக பெறப்​பட்ட தகவலில் தெரிய​வந்​துள்​ளது.

இதுத​விர, இரட்டை பாதை திட்​டங்​களுக்​கும் குறை​வான நிதியே வழங்​கப்​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. தமிழகத்​தில் ரயில்வே திட்​டங்​களுக்​கு, நிலம் கையகப்​படுத்​து​வ​தில் தாமதம் செய்து வரு​வ​தாக ரயில்வே நிர்​வாகம் குற்​றச்​சாட்டி வரு​கிறது. இருப்​பினும், புதிய ரயில் பாதை திட்​டங்​களுக்கு போதிய நிதி​யும் ஒதுக்​காதது, தகவல் அறி​யும் உரிமை சட்​டத்​தின் கீழ் பெறப்​பட்ட தகவலில் தெரிய வந்​துள்​ளது.

சென்​னையைச் சேர்ந்த சமூக ஆர்​வலர் தயானந்த் கிருஷ்ணன், தகவல் அறி​யும் உரிமை சட்​டத்​தின் கீழ், தெற்கு ரயில்​வே​யில் நடை​பெறும் திட்​டங்​களுக்​கு, மத்​திய பட்​ஜெட்​டில் ஒதுக்​கீடு செய்​துள்ள நிதி விபரங்​களை கேட்​டுள்​ளார்.

அதன்​படி, தமிழகத்​தில் மொத்​தம் 870.78 கி.மீ. தொலை​வுக்கு 10 புதிய ரயில் பாதை திட்​டங்​களுக்​கு, நடப்பு பட்​ஜெட்​டில் ரூ.497.57 கோடி மட்​டுமே ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இது, இதற்கு முந்​தைய பட்​ஜெட்டை ஒப்​பிடு​கை​யில், 19.48 சதவீதம் குறை​வாக இருக்​கிறது.

பல்​வேறு புதிய பாதை திட்​டங்​களுக்கு நிதி குறைத்​துள்​ளது தெரிய​வந்​தது. மேலும், திண்​டிவனம் – செஞ்​சி– திரு​வண்​ணா​மலை (70 கி.மீ.) அத்​திப்​பட்டு – புத்​தூர் (88.30 கி.மீ.), ஈரோடு – பழனி (91.05 கி.மீ.), சென்னை – மாமல்​லபுரம் – கடலுார் (179.28 கி.மீ.) ஆகிய புதிய பாதை திட்​டங்​களுக்கு தலா ஒரு ரூபாய் மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது.

புதிய ரயில் பாதைகளுக்​காக ஒதுக்​கப்​பட்ட ரூ.497.57 கோடி​யில் வெறும் இரண்டு திட்​டங்​கள் மட்​டுமே மொத்த நிதி​யில் 87.4 சதவீதம் பெற்​றுள்​ளன. தமிழகத்​தில் இரட்டை பாதை-கூடு​தல் பாதை திட்​டங்​கள் மிகக்​கடுமை​யான நிதிச்​சரிவை சந்​தித்​துள்​ளன.

14 இரட்​டைப்​பாதை- கூடு​தல் பாதை திட்​டங்​களின் (658.34 கி.மீ.) மொத்த மதிப்​பீடு ரூ.8,173.35 கோடி. ஆனால், 2026-27-ம் நிதி​யாண்​டில் வெறும் ரூ.324.10 கோடி மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

காட்​பாடி - விழுப்​புரம், சேலம் - கரூர் - திண்​டுக்​கல், ஈரோடு - கரூர் ஆகிய 3 முக்​கிய திட்​டங்​களுக்​கான நிதி ரூ.400.45 கோடி​யில் இருந்து ரூ.12 கோடி​யாகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது.​திட்​டத்​துக்​கான நிதி குறைக்​கப்​பட்​டுள்​ள​தால், புதிய, இரட்​டை​பாதை பணி​கள் பின்​னடைவை சந்​தித்​துள்​ளன.

இது குறித்​து, சமூக ஆர்​வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறுகை​யில், "தமிழகத்​தில் ரயில் பாதை அமைக்​கும் பணி​களில் உள்ள சிக்​கல்​களை தீர்ப்​ப​தில், 20 ஆண்​டு​களை இழந்து விட்​டோம். இனி​யும் தாம​திக்க கூடாது. தமிழகத்​தின் ரயில்வே உட்​கட்​டமைப்பு வளர்ச்​சியை ஏற்​படுத்​திட தமிழக முதல்​வர்​ உரிய நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​" என்​றார்​.

தமிழகத்தில் 4 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை: ஆர்டிஐ மனுவில் பதில்
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் தீ விபத்து: போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in