தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை மறுபரிசீலனை செய்க: சிபிஐ

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனத்தை மறுபரிசீலனை செய்து, பொருத்தமான பிரதிநிதியை நியமனம் செய்ய வேண்டும் என முதல்வர் விஜய்யை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக அரசியல் செல்வாக்குடன், பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வரும் வெங்கட் கே. நாராயணா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் தமிழ்நாட்டில் வாதப்பிரதிவாதத்தை உருவாக்கி, கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் பற்றிய புரிதலிலும், கலை, இலக்கியம், பண்பாட்டு துறைகளிலும் போதிய புரிதலும் இல்லாத ஒருவர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அவரது நியமனத்தை மறுபரிசீலனை செய்து, பொருத்தமான பிரதிநிதியை நியமனம் செய்ய வேண்டும் என முதல்வரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in