ஐஜி மீது பண மோசடி புகார் குறித்து விசாரிக்க உத்தரவு

ஐஜி மீது பண மோசடி புகார் குறித்து விசாரிக்க உத்தரவு
Updated on
1 min read

மதுரை: காவல் ஐஜி-க்கு எதி​ரான பணமோசடி புகாரை விசாரிக்க குற்​றப்​பிரிவு காவல்​துறைக்கு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

மதுரை கோச்​சடைப் பகு​தியைச் சேர்ந்த குணசேகரன்,மதுரை முதலாவது நீதித்​துறை நடு​வர் மன்​றத்தில் தாக்​கல் செய்த மனுவில், காவல் பயிற்​சிப் பள்ளி ஐஜிஜெயக​வுரிக்​குச் சொந்​தமான வணிக நிலம் மற்​றும் கட்டிடத்தை 17 ஆண்​டுகளாகப் பராமரித்து வந்​ததாகவும் ஐஜி கூறியபடி அந்தக் கடைகளை வாடைக்குவிட முன்பணமாக பலரிடம் ரூ.95 லட்​சம் பெற்று அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

பின்​னர் அந்​தக் கடைகளை வேறு நிறு​வனங்களுக்கு வழங்​கியதுடன் முன்பணத்தையும் தராமல் கொலை மிரட்​டல் விடுத்​து சிறை வைத்​ததாகவும் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி ஆனந்த் விசா​ரித்​து, மனு​தா​ரரின் புகாரை மதுரை மாநகர குற்​றப்​புரிவு ஆய்​வாளர் விசாரித்து குற்​றம் நடந்​திருந்தால் எப்ஐஆர் பதிவு செய்து விசா​ரிக்க உத்​தர​விட்​டார்.

ஐஜி மீது பண மோசடி புகார் குறித்து விசாரிக்க உத்தரவு
கரூர் கல்லூரி மாணவி கொலை வழக்கில் பிறழ்சாட்சியம் அளித்த சக மாணவர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in