கரூர் கல்லூரி மாணவி கொலை வழக்கில் பிறழ்சாட்சியம் அளித்த சக மாணவர்கள்

‘காகிதப் புலிகளாக’ இருக்க வேண்டாம் என நீதிபதிகள் அறிவுரை
Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on
1 min read

மதுரை: கரூர் பொறி​யியல் கல்​லூரி மாணவி வகுப்​பறை​யில் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் பிறழ்​சாட்சி அளித்த மாணவர்​கள் சமூக ஊடகங்​களில் வெறுமனே எதிர்ப்பு கருத்​துகளை தெரி​விப்​ப​தால் எந்​தப் பலனும் இல்​லை. அது செய​லாக மாறா​விட்​டால் மாணவர்​கள் நிஜ வாழ்க்​கை​யில் காகிதப் புலிகளாக மட்​டுமே இருப்​பர் என உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் அறி​வுரை வழங்கி உள்​ளனர்.

கரூர் பொறி​யியல் கல்​லூரி​யில் 2016-ல் பிஇ 3-ம் ஆண்டு படித்து வந்​தவர் சோனாலி. இவருடன் படித்​தவர் உதயகு​மார். இருவரும் நண்​பர்​களாக இருந்​துள்​ளனர். பின்​னர், உதயகு​மாருடன் பேசுவதை சோனாலி நிறுத்​தி​விட்​டார்.

இந்​நிலை​யில் 2016 ஆக. 30-ல் கல்​லூரி​யில் வகுப்பு நடந்​த​ போது, மரக்​கட்​டை​யுடன் வந்த உதயகு​மார் வகுப்​பறை​யில் பேராசிரியர், சக மாணவர்​கள் முன்​னிலை​யில் சோனாலி​யின் தலை​யில் கடுமை​யாகத் தாக்​கி​னார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்டு உயி​ரிழந்​தார். இதையடுத்து உதயகு​மாரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இவ்​வழக்கை விசா​ரித்த கரூர் மகளிர் நீதி​மன்​றம் உதயகு​மாருக்கு ஆயுள் தண்​டனை வழங்கி 2022 பிப். 1-ல் தீர்ப்​பளித்​தது. இந்த தண்​டனையை ரத்து செய்​யக்​கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் உதயகு​மார் மேல்​முறை​யீடு செய்​தார். இம்​மனுவை நீதிப​தி​கள் ஆனந்த் வெங்​கடேஷ்,ராமகிருஷ்ணன் அமர்வு விசா​ரித்​தது. மனு​தா​ரர் தரப்​பில், வழக்​கின் சாட்​சிகள் பலர் பிறழ்சாட்​சிகளாக மாறி​விட்​டனர்.

அடை​யாள அணி வகுப்பு முறை​யாக நடத்​தப்​பட​வில்லை என வாதிடப்பட்டது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: பழகு​வதை நிறுத்​தும் பெண்ணை கொலை செய்​வது நியாய​மான செயல் என நினைக்​கும் போக்கு சமீப​காலங்​களில் அதி​கரித்து வரு​கிறது. மனு​தா​ரரின் கொடூர​மான செய​லால், பெரிய கனவு​களு​டன் வாழ்ந்த ஒரு பெண்​ணின் உயிர் பறி​போய்​விட்​டது.

வகுப்​பறை​யில் பல மாணவர்​கள் முன்​னிலை​யில் பட்​டப்​பகலில் சம்​பவம் நடந்​துள்​ளது. தாக்​குதலை தடுக்க சக மாணவர்​கள் எந்த முயற்​சி​யும் எடுக்​க​வில்​லை. நீதி​மன்​றத்​திலா​வது உண்​மை​யான சாட்​சி​யம் அளித்​திருக்க வேண்​டும். அதை செய்​யாமல் பிறழ் சாட்​சி​யாக மாறி​யுள்​ளனர். சமூக ஊடகங்​களில் வெறுமனே எதிர்ப்பு கருத்​துகளைத் தெரி​விப்​ப​தில் எந்​தப் பலனும் இல்​லை. அது செய​லாக மாற வேண்​டும். இல்​லா​விட்​டால், மாணவர்​கள் நிஜ வாழ்க்​கை​யில் காகிதப் புலிகளாக மட்​டுமே இருப்​பர்.

இந்த வழக்​கில் போது​மான அளவு உறு​திப்​படுத்​தப்​பட்ட சாட்​சி​யங்​கள் உள்​ள​தால் சிறிய முரண்​பாடு​களை கவனிக்க வேண்​டிய​தில்​லை. இதனால் விசா​ரணை நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பில் தலை​யிட வேண்​டிய​தில்​லை. மேல்​முறை​யீடு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் குறிப்​பிட்​டுள்​ளனர்.

Santhanakoodu Festival
தமிழகத்தின் மின் கட்டமைப்பை வலுப்படுத்த 231 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் விஜய் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in