தமிழகத்தில் டிச. 5 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் டிச.5-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் கீழ் அடுக்குகளில் வடகிழக்கு பருவக் காற்று வீசுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (நவ.30) வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

டிச.1-ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

டிச.2-ம் தேதி நீலகிரி, கோவை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் சிலவற்றில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், நீலகிரி மாவட்டம் கின்னக்கோரையில் தலா 8 செமீ, நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட்டில் 7 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தலா 6 செமீ, நீலகிரி மாவட்டம் பர்லியார், குன்னூரில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியே தீருவோம்”: பிரதமர் மோடி

X