தீபாவளிக்கு முன்பாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்க வாய்ப்பு: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்

தீபாவளிக்கு முன்பாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்க வாய்ப்பு: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
Updated on
1 min read

சென்னை: நடப்​பாண்​டில் தீபாவளி பண்​டிகைக்கு முன்​பாகவோ அல்​லது பிறகோ கிளாம்​பாக்​கம் புறநகர் ரயில் நிலை​யம் திறக்க வாய்ப்பு உள்​ளது என்று சென்னை ரயில்வே கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங் தெரி​வித்​தார்.

சென்​னை​யில் நிருபர்​களிடம், ரயில்வே கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங் நேற்று கூறிய​தாவது: ஆதம்​பாக்​கம் ரயில் நிலைய தண்​ட​வாளத்​தில் தொழில்​நுட்ப கோளாறு உள்​ளது.

தண்​ட​வாளம் வளைந்து உள்​ள​தால், ஆதம்​பாக்​கம் ரயில் நிலை​யத்​தில் பயணி​கள் இறங்​கு​வ​தில் சிரமம் இருக்​கிறது. எனவே, இதை சரி செய்​யும் பணி​களில் ஈடுபட உள்​ளோம்.

இப்​பணி​களுக்கு ஒப்​பந்​தம் விட்​டு, பணி நடை​பெற உள்​ளது. விரை​வில், இந்த ஒரு ரயில் நிலைய பாது​காப்பு பணி​களுக்​கான சான்​றிதழ் பெற்று ரயில்​கள் நின்று செல்ல ஏற்​பாடு செய்​யப்​படும்.

கிளம்​பாக்​கம் ரயில் நிலை​யத்தை பேருந்து நிலை​யத்​துடன் இணைக்​கும் வகை​யில், ஜிஎஸ்டி சாலை​யில் ஆகாய நடை​பாதை பணி​கள் மாநில அரசு தரப்​பில் மேற்​கொள்​ளப்​படு​கிறது.

குறிப்​பாக, ரயில் நிலை​யத்​தோடு இணைக்க வேண்​டிய பணி​கள் மீதம் இருக்​கின்​றன. பணி​களை முடித்​து, நடப்​பாண்​டில் தீபாவளிக்கு முன்​பாகவோ அல்​லது தீபாவளிக்கு பிறகோ கிளாம்​பாக்​கம் புறநகர் ரயில் நிலை​யம் திறக்க வாய்ப்​புள்​ளது.

சென்னை ரயில்வே கோட்​டத்​துக்கு 2-வது ஏசி மின்​சார ரயில் ஒரு மாதத்​தில் பயன்​பாட்​டுக்கு கொண்ட வர திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

தாம்​பரம் - கடற்​கரை தடத்​தில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், சேத்​துப்​பட்டு நிலை​யத்​தில் நெடுநேரம் நிறுத்தி இயக்​கப்​படு​வ​தால், பயணி​கள் சிரமத்தை சந்​திப்​ப​தாக புகார்​கள் வரு​கின்​றன.

லோக்​கல் பாஸ்ட் ரயில்​களை விரைவு பாதை​யில் இருந்து மின்​சார ரயில் பாதைக்கு மாற்றி இயக்​கு​வ​தால், இந்த தாமதம் ஏற்​படு​கிறது. விரை​வில், இப்​பிரச்​சினை சரிசெய்​யப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

ரயில்வே கோட்ட கூடு​தல் மேலா​ளர் செந்​தில்​கு​மார் கூறும்​போது, “சென்னை கோட்​டம் கடந்த நிதி​யாண்​டில் இது​வரை இல்​லாத அளவுக்கு ரூ.5 ஆயிரத்து 38 கோடி வரு​வாய் எட்​டி​யுள்​ளது. 11.330 மில்​லியன் டன் சரக்​கு​கள் கையாளப்​பட்​டுள்​ளன.

26 ரயில் நிலை​யங்​களில் சிசிடிவி கேம​ராக்​கள் முழு​வது​மாக பொருத்​தப்​பட்​டுள்​ளன. எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் ரூ.720 கோடி​யில் மறுசீரமைப்பு பணி​கள் நடை​பெறுகின்​றன. இப்​பணி​கள் அனைத்​தும் அடுத்த ஆண்டு மார்ச்​சில் முடிக்​கப்​படும்” என்​றார்.

தீபாவளிக்கு முன்பாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்க வாய்ப்பு: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
திருவொற்றியூரில் மோதல்: பள்ளி மாணவன் கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in