‘பீக்காக்’ மாவட்ட விசில் பார்ட்டிக்குள் 2 கோஷ்டிகள் | உள்குத்து உளவாளி

‘பீக்காக்’ மாவட்ட விசில் பார்ட்டிக்குள் 2 கோஷ்டிகள் | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

‘பீக்காக்’ மாவட்ட விசில் பார்ட்டிக்கு, ரசிகர் மன்றத் தலைவராக இருந்த ‘நாதன்’ செயலாளராக இருக்கிறார்.

வழக்கம் போல இந்த மாவட்டத்திலும் மாற்றுக் கட்சி கலப்படங்கள் ஆங்காங்கே கலந்த நிலையில், சூப்பர் ஸ்டாரின் பெயரைக் கொண்ட சூரியக் கட்சியின் கவுன்சிலர் ஒருவரும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என நினைத்து ‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவின் ரூட்டைப் பிடித்து கடந்த ஜூனில் பனையூர் பிரவேசம் செய்தார்.

மேலிடத்து தொடர்பில் வந்ததாலோ என்னவோ உள்ளூரில் மாவட்டச் செயலாளரை லெஃப்ட்டில் டீல் செய்திருக்கிறார். அவருக்கு எந்த தகவலும் சொல்லாமல் பொறுப்பு மாண்புமிகுவான ஆடிட்டரை அழைத்து வந்து ‘தளபதி’ பிறந்த நாளை தடபுடலாக நடத்தினாராம்.

அந்த சமயத்தில், “எங்கப்பா மாவட்டச் செயலாளர்?” என்று ஆடிட்டர் கேட்டதற்கு, “சென்னைக்கு ஒரு வேலையாப் போயிருக்காரு” என்று இஷ்டத்துக்கு அடித்துவிட்டாராம் ‘சூப்பர் ஸ்டார்’.

இதனைத் தொடர்ந்து, ‘பீக்காக்’ மாவட்ட விசில் கட்சிக்குள் இரண்டு கோஷ்டிகள் முஷ்டி தூக்கியது. இந்த நிலையில், அண்மையில் கடற்கரை ஊரில் ஆடிட்டர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில், ‘நாதன்’ கோஷ்டியும் ‘சூப்பர் ஸ்டார்’ கோஷ்டியும் பொதுவெளியிலேயே பொளந்துகட்டிக் கொண்டார்கள். இதைப் பார்த்துவிட்டுப் பதறிப்போன ஆடிட்டர், இரு தரப்பையும் பிரித்துவிட்டு சமாதானம் செய்தாராம்.

சமாதானப்படலத்தின் போதே இருவரும் மீண்டும் ‘அக்னிநட்சத்திரம்’ அவதாரம் எடுத்தார்களாம். இதையடுத்து இந்தப் பஞ்சாயத்து, ‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவின் பேட்டைக்குப் போனதாம். அதைத் தொடர்ந்து என்ன நடந்ததோ தெரியவில்லை, பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன் ‘சூப்பர் ஸ்டார்’ கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அப்புறப்படுத்தப்படுவதாக தனது லெட்டர் பேடில் கெத்தாக அறிக்கை விட்டு தனது செல்வாக்கை நிரூபித்திருக்கிறார் திருவாளர் ‘நாதன்’. இதனால், ‘சூப்பர் ஸ்டாருக்கு’ பின்னால் அணிவகுத்து நின்றவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்களாம்.

‘பீக்காக்’ மாவட்ட விசில் பார்ட்டிக்குள் 2 கோஷ்டிகள் | உள்குத்து உளவாளி
திருச்சி, திருப்பதி உட்பட 11 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க டெல்லியில் இன்று ஆலோசனை

X