கி.ஜெயகாந்தன்
கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் 2004-ல் ‘தினபூமி’யில் நிருபராக ஆரம்பித்த எனது எழுத்து மற்றும் புகைப்பட பணி காலைக்கதிர் (தினமலர்) நாளிதழில், தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டத்தில் பணிபுரிந்தேன். இதனை தொடர்ந்து வேந்தர் தொலைகாட்சி, டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் ஆன்லைன் நாளிதழிலும் பணியை தொடர்ந்து, தற்போது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கல்வி, விவசாயம், தொழில், ஆன்மிகம், அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், இளைஞர் திறன் மேம்பாடு, துறைகளில் அதிக கவனம் செலுத்துகிறேன்.
அனைத்து திசைகளிலும் எனது கவனத்தை செலுத்தி, பொதுநல கட்டுரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். எழுத்துப் பணி என்னை ஆதரிக்காமல் இருந்திருந்தால், சினிமா அல்லது வனவிலங்கு புகைபடம் ஒளிப்பதிவாளராக இருந்திருப்பேன். புத்தகம் வாசிப்பது.வனப்பகுதியில் இயற்கையை ரசித்து, அதனை புகைப்படம் எடுப்பது மிகவும் ஆர்வம் உண்டு எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராக வர வேண்டும் என்பது எனது விருப்பம். தமிழால் இணைந்து, புதிய இலக்கு நோக்கி எனது பயணம் தொடர்கிறது.