‘மாப்பிள்ளை’ மாண்புமிகு தரப்பின் ‘பெரிய’ சிற்றுண்டி பில் | உள்குத்து உளவாளி

‘மாப்பிள்ளை’ மாண்புமிகு தரப்பின் ‘பெரிய’ சிற்றுண்டி பில் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

நிதிக் கசிவு குறித்து நித்தமும் பிஹெச்டி அளவுக்கு பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது விசில் பார்ட்டி அரசாங்கம். இந்த நிலையில் அண்மையில், ’மாப்பிள்ளை’ மாண்புமிகு தரப்பில் இருந்து சிற்றுண்டி செலவு ரூ.5 லட்சம் என பில் போடப்பட்டு க்ளெய்ம் செய்ய பொதுத் துறைக்கு அனுப்பப்பட்டதாம். பில்லைப் பார்த்துவிட்டு பிடறியைப் பிடித்துக் கொண்ட அதிகாரிகள், விஷயத்தை முதன்மையானவர் அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்களாம்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ‘மாப்பிள்ளை’ சார், “க்ளெய்ம் எல்லாம் ஒண்ணும் வேண்டாம். எவ்வளவு செலவு வந்தாலும் இனி நானே பாத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டாராம். அதேசமயம், “போன ஆட்சியில இதைவிட பெருசா எல்லாம் பில்லைப் போட்டு பணத்தை எடுத்துருக்காங்க. அப்பெல்லாம் அப்ஜெக்‌ஷன் சொல்லாதவங்க இப்ப காரணம் கேக்குறாங்க” என்று தனக்கு நெருக்கமான சகாக்களிடம் புலம்பித் தீர்த்துவிட்டாராம் மாண்புமிகு ’மாப்பிள்ளை’.

‘மாப்பிள்ளை’ மாண்புமிகு தரப்பின் ‘பெரிய’ சிற்றுண்டி பில் | உள்குத்து உளவாளி
சீறும் கட்சி ‘மாநாடு’ அரசியல் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in