அதிகாரிகளுக்கு ஆறுதல் சொல்லிய ‘ராஜ’ மாண்புமிகு | உள்குத்து உளவாளி

அதிகாரிகளுக்கு ஆறுதல் சொல்லிய ‘ராஜ’ மாண்புமிகு | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘தேர்தலில் வென்று அதிகாரத்தில் அமர்ந்தவர்களைவிட தோற்றவர்கள்தான் ஆட்சிக்கு எதிரான அவப்பெயர்களை சம்பாதித்துப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

விழுப்புரம் பக்கத்தில் இருக்கிற ‘புரம்’ தொகுதியில் போட்டியிட்ட மீன்கொடி தேசத்து ‘மன்னன்’ பெயர் கொண்டவர் கரை சேரமுடியாமல் தோற்றுப் போனார். அப்படியும் அசராதவர், கோட்டை பக்கம் வந்து, ‘ராஜ’ மாண்புமிகுவிடம் பக்குவமாக ஒட்டிக் கொண்டுவிட்டாராம்.

தினமும் காலை 8 மணிக்கெல்லாம் ‘ராஜ’ மாண்புமிகுவுக்கு முன்பே கோட்டைக்கு வந்துவிடும் ‘மன்னன்’, ‘ராஜ’ மாண்புமிகுவின் அறையில் அதிகாரத் தோரணையில் அமர்ந்து கொண்டு, அலப்பறையைக் கூட்டுகிறாராம். மாண்புமிகுவை சந்திக்க வரும் அதிகாரிகள், விருந்தினர்கள் அனைவரும் இவரது ‘தாம் தூம்’களை தாங்கமுடியாமல் தெறித்து ஓடுகிறார்களாம்.

‘ராஜ’ மாண்புமிகு கலந்து கொள்ளும் அலுவல் சார்ந்த கூட்டங்களிலும் இடைச்செருகலாக வந்து உட்கார்ந்து கொண்டு இம்சையைக் கூட்டுகிறாராம். அது மாத்திரமல்லாது, ‘ராஜ’ மாண்புமிகு வெளியில் எங்காவது பணி நிமித்தமாகப் பயணப்பட்டாலும் வான்ட்டடாக வந்து வண்டியில் ஏறிக் கொள்கிறாராம்.

திருவாளர் ‘மன்னனால்’ ஏகப்பட்ட சங்கடங்களைச் சந்தித்து வரும் அதிகாரிகள் இதுகுறித்து ‘ராஜ’ மாண்புமிகுவிடம் இதம் பதமாக எடுத்துச் சொன்னார்களாம்.

‘மன்னனின்’ மகாத்மியங்களைக் கேட்டு முகம்சுளித்த ‘ராஜ’ மாண்புமிகுவும், “என்னங்க பண்றது... கட்சிக்காரரா போயிட்டதால என்னால எதுவும் சுளீர்னு சொல்லமுடியல. கொஞ்சம் பொறுத்துக்குங்க க்ளியர் பண்ணிருவோம்” என்று அதிகாரிகளுக்கு ஆறுதல் சொல்லி வைத்திருக்கிறாராம்.

அதிகாரிகளுக்கு ஆறுதல் சொல்லிய ‘ராஜ’ மாண்புமிகு | உள்குத்து உளவாளி
டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in