அன்பில் மகேஸை வழக்கறிஞர் அலுவலகத்துக்கு வெளியே ஒன்றரை மணி நேரம் காத்திருந்து கைது செய்தோம்: காவல் துறை

உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
அன்பில் மகேஸை வழக்கறிஞர் அலுவலகத்துக்கு வெளியே ஒன்றரை மணி நேரம் காத்திருந்து கைது செய்தோம்: காவல் துறை
Updated on: 
2 min read

சென்னை: வழக்கு தொடர்​பாக ஆலோ​சனை நடத்த வந்த முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸை வழக்கறிஞர் அலுவலகத்துக்கு வெளியே ஒன்றரை மணி நேரம் காத்திருந்து கைது செய்தோம் என உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கமளித்துள்ளது.

தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் பெற்​றுத் தரு​வ​தாகக்​கூறி ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து பணமோசடி​யில் ஈடு​பட்​ட​தாக தனக்கு எதிராக பதி​யப்​பட்ட வழக்கை ரத்து செய்​யக்​கோரி திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தாக்​கல் செய்​திருந்த மனு நீதிபதி வி.லட்​சுமி நாரா

யணன் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மாநில அரசு தலைமை குற்​றவியல் வழக்​கறிஞர் ஜான் சத்​யன் மற்​றும் கூடுதல் குற்​றவியல் வழக்​கறிஞர் அருண் அன்​புமணி ஆகியோர், ” அன்​பில் மகேஸ் தற்​போது கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

அவருக்கு ஜாமீன் கோரி சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளனர். போலீ​ஸார் தரப்​பில் 5 நாட்​கள் காவல் கோரி நாங்​களும் மனு தாக்​கல் செய்​துள்​ளோம்.

இந்த வழக்​கில் தலை மறைவாக இருந்த முன்னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமார் ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் இன்று ( நேற்று) சரண் அடைந்​துள்​ளார். எனவே இந்த வழக்கை ரத்து செய்​யக்​கூடாது” என வாதிட்​டனர்.

அப்​போது அன்​பில் மகேஸ் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பி.வில்​சன்,“ அன்​பில் மகேஸுக்கு முன்​ஜாமீன் கோரி தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்த மனுவை இந்த நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​ததால், அடுத்​தகட்​ட​மாக உச்ச நீதி​மன்​றத்தை நாடுவது தொடர்​பாக எனது அலு​வல​கத்​துக்கு வந்து ஆலோ​சனை நடத்​திய அன்​பில் மகேஸை 40-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் எனது அலு​வலக வளாகத்​துக்​குள் அத்​து​மீறி நுழைந்து கைது செய்​யும் அளவுக்கு தமிழகத்​தில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்​கிறது. இதற்கு முன்​பாக இதுபோல எங்​கும் நடை​பெற்​றது இல்லை’ என குற்​றம் சாட்​டினார்.

நீதி​மன்​றம் நிராகரிப்பு

அப்​போது காவல்துறை தரப்​பில், அலு​வல​கத்​தின் வெளியே சுமார் ஒன்​றரை மணி நேரம் காத்​திருந்து தான் அன்​பில் மகேஸை கைது செய்​தோம்.

மூத்த வழக்​கறிஞரின் அலு​வல​கத்​துக்​குள் அத்​து​மீறி புகுந்து எல்​லாம் அவரை கைது செய்​ய​வில்லை. இந்த குற்​றச்​சாட்டை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றமும் நிராகரித்​துள்​ளது’ என தெரி​வி்க்​கப்​பட்​டது.

அதையடுத்து நீதிபதி, இது​தொடர்​பான வீடியோ ஆதா​ரங்​களு​டன் மனு தாக்​கல் செய்ய அறி​வுறுத்தி, வழக்கை ரத்து செய்​யக்​கோரி அன்​பில் மகேஸ் தாக்​கல் செய்​திருந்த மனு மீதான விசா​ரணையை வரும் நவ.10-க்கு தள்ளி வைத்​துள்​ளார்.

ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவு

தனக்கு ஜாமீன் வழங்கக்​கோரி அன்​பில் மகேஸ் தரப்​பில் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தது.

அதேபோல அன்​பில் மகேஸை 5 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதி கோரி மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் தரப்​பிலும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனுதாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தது.

இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எல்.எஸ்.சத்​தி​ய மூர்த்தி முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது அன்​பில் மகேஸின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க போலீ​ஸார் தரப்​பி்ல் அவகாசம் கோரப்​பட்​டது. அதையேற்ற நீதிபதி, அன்​பில் மகேஸின் ஜாமீன் மனு மற்​றும் காவலில் எடுத்து விசா​ரி்க்க அனுமதி கோரும் மனு மீதான விசா​ரணையை வரும் நவ.2-க்கு தள்ளி வைத்​துள்​ளார்.

அன்பில் மகேஸை வழக்கறிஞர் அலுவலகத்துக்கு வெளியே ஒன்றரை மணி நேரம் காத்திருந்து கைது செய்தோம்: காவல் துறை
கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனை இன்று தொடக்கம்

X