அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் நவ.1-ல் பழனிசாமி ஆலோசனை

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி

Updated on: 
1 min read

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நவ.1-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வென்ற தொகுதிகளில், கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 3-ம் இடத்துக்கு சென்றுள்ளனர். இவ்விரு தொகுதிகளின் தேர்தல் தோல்விகள் குறித்தும் பொதுக்குழுவைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் வலியுறுத்தி வருகிறார்.

மேலும் தவெக ஆதரவு அதிருப்தி எம்எல்ஏக்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தனி அணியாகவே செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் கட்சி தனது தலைமையில் தனது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை தொடர்ந்து பழனிசாமி வெளிப்படுத்தி வருகிறார். அதிமுகவின் 54-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழாவையும் நிர்வாகிகளை அழைத்து சிறப்பாக நடத்தினார். மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களையும் நடத்தி இருந்தார் பழனிசாமி.

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நவ.1-ம் தேதி மாலை 3.30 மணிக்கு ஆலோசனை நடத்த இருப்பாக கட்சி தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை அதிருப்தி அணியினருக்கு தெரிவிக்கும் விதமாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இக்கூட்டத்தில், அதிருப்தி அணியின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, கட்சி வளர்ச்சிப் பணிகள், திரை நட்சத்திரங்களின் அரசியல் வருகை, அதிமுகவை புதிய பாய்ச்சலுக்கு தயார்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

<div class="paragraphs"><p>அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி</p></div>
“தவெக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை” - செல்லூர் ராஜு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in