முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்துப் பேசினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்துப் பேசினார்.

Updated on
1 min read

சென்னை: ​காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வரும், முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான ப.சிதம்​பரம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று முதல்​வர் விஜய்யை நேரில் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார்.

நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், தவெக​வுக்கு ஆட்​சி​யமைக்​கத் தேவை​யான தனிப் பெரும்​பான்மை கிடைக்​க​வில்​லை. இதைத்​தொடர்ந்​து, யாரும் எதிர்​பா​ராத திருப்​ப​மாக திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கிய காங்​கிரஸ் கட்​சி, தவெக​வுக்கு ஆதரவு அளித்து ஆட்​சி​யில் பங்கெடுத்தது.

தற்​போது தவெக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸுக்கு 2 அமைச்​சர் பதவி​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. மேலும், வரவிருக்​கும் அடுத்​தடுத்த தேர்​தல்​களி​லும் தவெக​வுடன் இணைந்தே பயணிக்க காங்​கிரஸ் தலைமை முடிவு செய்​துள்​ளது.

தேர்​தலுக்கு முன்​பாக காங்​கிரஸ் கட்​சி​யின் பெரும்​பாலான நிர்​வாகி​கள் தவெக​வுடன் கூட்​டணி அமைக்க வேண்​டும் என விரும்​பிய​போதும், திமுக உடனான கூட்​ட​ணியே தொடர வேண்​டும் என்​ப​தில் ப.சிதம்​பரம் பிடி​வாத​மாக இருந்​தார்.

இந்​தச் சூழ்​நிலை​யில், நேற்று தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை ப.சிதம்​பரம் சந்​தித்​துப் பேசி​னார். இந்த சந்​திப்பு அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் உற்​று​நோக்​கலை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அரை மணி நேரத்​திற்​கும் மேலாக நீடித்த இந்​தச் சந்​திப்​பில், மாநிலத்​தின் நிர்​வாக ரீதியி​லான பல்​வேறு திட்​டங்​கள் குறித்​தும், தற்​போதைய அரசி​யல் நில​வரங்​கள் குறித்​தும் இரு​வரும் விரி​வாகக் கருத்​துப் பரி​மாற்​றம் செய்​து​கொண்​ட​தாகத் தெரி​கிறது.

அதே ​நேரத்​தில் தமிழகத்​தில் தற்​போது காலி​யாக உள்ள ஒரு மாநிலங்​களவை இடத்தை காங்​கிரஸுக்கு ஒதுக்க வேண்​டும் என முதல்​வர் விஜய்​யிடம் ப.சிதம்​பரம் கோரிக்கை விடுத்​துள்​ள​தாகத் தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

மாநிலங்​களவை இடங்​களுக்​கான வேட்​புமனுத் தாக்​கல் ஏற்​கெனவே தொடங்​கி​விட்ட நிலை​யில், தவெக சார்​பில் இன்​னும் வேட்​பாளர் அறிவிக்​கப்​ப​டாத​தால், இந்​தச் சந்​திப்பு அந்த இடத்​துக்​கான பேச்​சு​வார்த்​தை​யாகவே இருக்​கலாம் என காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரி​விக்​கின்​றன.

<div class="paragraphs"><p>சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்துப் பேசினார்.</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 ஜூன் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in