மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 ஜூன் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 ஜூன் 2026
Updated on
2 min read

மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். விவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மிதுனம்: வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். பணிச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். கடன் பிரச்சினை அதிகமாகும். வியாபாரத்தில் லாபமுண்டு. பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று நடக்கவும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கடகம்: நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.

சிம்மம்: உற்றார் உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கன்னி: நீண்டநாளாக அடைக்கமுடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

துலாம்: தடைகள் உடைபடும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை விலகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் மதிப்புயரும்.

விருச்சிகம்: பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பங்குதாரரை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் பணியாளர்களிடம் கனிவாக பேசவும்.

தனுசு: மனைவிவழியில் விட்டுக் கொடுத்து போகவும். திட்டமிட்ட பணியை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மகரம்: புதிய சிந்தனையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: நீண்டநாட்களாக தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவார்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.

மீனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 ஜூன் 2026
ஜோதிட நாள்காட்டி 03.06.2026 | வைகாசி 20 - புதன்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in