ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க பிறப்பித்த உத்தரவு ரத்து

“சென்னை நகர் பகுதிகளில் இருந்தும் இயக்கலாம்”
ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க பிறப்பித்த உத்தரவு ரத்து
Updated on
2 min read

சென்னை: சென்​னை​யில் இருந்து தென் மாவட்​டங்​களுக்குச் செல்​லும் தனி​யார் ஆம்னி பேருந்​துகள் கிளாம்​பாக்​கம் பேருந்து முனை​யத்​தில் இருந்தே இயக்​கப்பட வேண்​டும் என்ற மாநில போக்​கு​வரத்து ஆணை​யரின் உத்​தரவை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், மாதவரம் ரவுண்​டானா பகு​தி​யிலும் பயணி​களை ஏற்​றி, இறக்​கிச் செல்லவும் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா ஆட்சி காலத்​தில் கடந்த 2013-ல் கிளாம்​பாக்​கத்​தில் புதி​தாக பேருந்து முனை​யம் ஏற்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டது. அதன்​பிறகு 2023-ல் திமுக ஆட்​சி​யில் திறக்​கப்​பட்​டது. சென்​னை​யில் இருந்து தென் மாவட்​டங்​களுக்குச் செல்​லும் தனி​யார் ஆம்னி பேருந்​துகள் கோயம்​பேடுக்குப் பதிலாக, கிளாம்​பாக்​கத்​தில் இருந்தே இயக்​கப்பட வேண்​டுமென மாநில போக்​கு​வரத்து ஆணை​யர் கடந்த 2024 ஜன.22-ல் உத்​தர​விட்​டிருந்​தார்.

மேலும் ஆம்னி பேருந்​துகள் சென்னை மாநகரில் இருந்து பயணி​களை ஏற்​றவோ, இறக்​கவோ கூடாது என்​றும் மீறி​னால் அபராதம் விதிக்​கப்​படும் என்​றும் உத்​தர​விடப்​பட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் அனைத்து ஆம்னி பேருந்​துகள் உரிமை​யாளர்​கள் சங்​கத் தலை​வ​ரான ஏ.அன்​பழகன், தமிழ்​நாடு ஆம்னி பேருந்​துகள் உரிமை​யாளர்​கள் சங்​கத் தலை​வ​ரான ஏ.அப்​ஸல் மற்​றும் தனி​யார் பேருந்து நிறு​வனங்​களின் உரிமை​யாளர்​கள் வழக்​கு​ தொடர்ந்தனர்.

இந்த வழக்​கு​களை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், தனி​யார் ஆம்னி பேருந்​துகளை வழக்​கம்​போல கோயம்​பேட்​டில் இருந்து இயக்​கலாம் என்​றும், போரூர் சுங்​கச்​சாவடி மற்​றும் சூரப்​பட்டு சுங்​கச்​சாவடி ஆகிய இடங்​களில் மட்​டும் பயணி​களை ஏற்​றி, இறக்​கிச் செல்​லலாம் என்​றும் தென் மாவட்​டங்​களுக்​குச் செல்​லும் அனைத்து ஆம்னி பேருந்​துகளும் கட்​டாய​மாக கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​துக்​குள் சென்று பயணி​களை ஏற்​றிச்​செல்ல வேண்​டுமென இடைக்​கால​மாக உத்​தர​விட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் பிறப்​பித்​த உத்​தரவு: மோட்​டார் வாக​னச் சட்ட விதி​களின்​படி கிளாம்​பாக்​கத்​தில் பேருந்து முனை​யம் அமைக்​க​வும், அதை பராமரிக்​க​வும் மாநில போக்​கு​வரத்து குழு​மத்​தின் ஒப்​புதல் கோரி சென்னை பெருநகர வளர்ச்​சிக் ​குழு​மம் விண்​ணப்​பிக்க முடி​யாது. சம்​பந்​தப்​பட்ட காட்​டாங்​கொளத்​தூர் பஞ்​சா​யத்து யூனியன் நிர்​வாகம் தான் விண்​ணப்​பிக்க வேண்​டும். மேலும் ஆம்னி பேருந்​துகளை எந்​தெந்த வழித்​தடங்​களில் இயக்க அனு​ம​தி​யும், உரிம​மும் வழங்​கப்​பட்​டுள்​ளதோ திடீரென அதை தடுக்​கும் வித​மாக மாநில போக்​கு​வரத்து குழு​மம் உத்​தர​விட முடி​யாது.

எனவே தென் மாவட்​டங்​களுக்கு இயக்​கப்​படும் தனி​யார் ஆம்னி பேருந்​துகளை கிளாம்​பாக்​கம் பேருந்து முனை​யத்​தில் இருந்​து​தான் இயக்​கப்பட வேண்​டும் என்ற மாநில போக்​கு​வரத்து ஆணை​யரின் உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது. மேலும், ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​களு​டன் அரசு போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யில் எடுக்​கப்​பட்ட முடி​வின்​படி மாதவரம் ரவுண்​டானா பகு​தி​யில் இருந்​தும் பயணி​களை ஏற்​றி, இறக்​கிச் செல்ல அனு​ம​திக்க வேண்​டும் என்ற கோரிக்​கை​யும் ஏற்​கப்​படு​கிறது. இவ்​வாறு உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில் அரசு பேருந்​துகளில் பயணிக்​கும் ஏழை, எளிய​வர்​கள் மட்​டும் புறநகரில் உள்ள கிளாம்​பாக்​கம் பேருந்து முனை​யத்​துக்கு சென்று அரசுப் பேருந்​துகளை பயன்​படுத்தி வரும் நிலை​யில், ஆம்னி பேருந்​துகளுக்கு மட்​டும் சென்னை மாநகருக்​குள் அனு​மதி வழங்​கு​வது ஏற்​புடையதல்ல என்​றும், உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்​பில் மேல்​முறை​யீடு செய்ய கோரிக்கை எழுந்துள்​ளது.

வர​வேற்பு: இதனிடையே அனைத்து ஆம்னி பேருந்​துகள் உரிமை​யாளர் சங்​கத்​தின் தலை​வர் அன்​பழகன் தீர்ப்பை வரவேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், இத்​தீர்ப்​பின் மூலம், பயணி​கள் பெரிதும் பயனடை​வார்​கள். தனி​யார் பொதுப் போக்​கு​வரத்து துறை​யின் நலன்​களை​ பாது​காக்​கும் முக்​கிய​மான தீர்ப்​பாக இது அமைந்​துள்​ளது. இதற்​காக உயர் நீதி​மன்​றத்​துக்​கும், வழக்​கறிஞர்​களுக்​கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க பிறப்பித்த உத்தரவு ரத்து
ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் தாமதம் ஏன்? - ட்ரம்ப் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in