நீர்மட்டம் 91 அடிக்கு வராத நிலையில் மேட்டூர் அணையை திறந்தால் கடைக்கோடிக்கு நீர் செல்லாது: செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

Updated on
1 min read

ஈரோடு: மேட்​டூர் அணை நீர்​மட்​டம் 91 அடிக்கு வரவில்லை என்​றால், தண்​ணீரை திறந்​து​விட்​டாலும் கடைக்​கோடி​யில் இருக்​கிற மக்​களுக்கு நீர் போய் சேர்​வது எளி​தாக இருக்​காது என அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

முதல்​வர் விஜய்​யின் பிறந்த நாளை முன்​னிட்​டு, ஈரோடு மாவட்​டம் கோபியை அடுத்த நம்​பியூரில் செயல்​படும் தனி​யார் பள்​ளி​யில், தவெக சார்​பில் பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நடை​பெற்​றது. விழா​வில் செங்​கோட்​டையன் கலந்து கொண்டு ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோருக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்கினார்.

பின்னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: 436 திட்​டப்​பணி​களை ஐந்​தாண்டு காலத்​துக்​குள் நிறைவேற்ற வேண்​டும் என்று அமைச்​சர​வைக் கூட்​டத்​திலேயே தீர்​மானம் வெளி​யிட்​டு, முதல்​வர் வரலாறு படைத்​துள்​ளார். கர்​நாட​கா​வில் இருந்து உபரி நீர் வரும் என்று நினைத்​தோம். தென்​மேற்​குப் பரு​வ​மழை குறைந்​த​தால், 12 மாவட்​டங்​களில் வறட்சி வர வாய்ப்பு உள்​ள​தாக குறிப்​பிட்​டிருக்​கிறார்​கள். மழை குறைந்​த​தால் அணை​களில் நீர்​வரத்து குறைந்​து, தண்​ணீர் திறப்​ப​தில் கால​தாமதம் ஏற்​பட்​டுள்​ளது.

அதே நேரத்​தில், மேட்​டூரைப் பொறுத்​தவரை​யிலும் கடந்த 21 ஆண்டு காலத்​தில் 7 முறை​தான் ஜூன் 12-ம் தேதி அன்று தண்​ணீர் திறக்​கப்​பட்​டிருக்​கிறது. அணை நீர்​மட்​டம் 91 அடிக்கு வரவில்லை என்​றால், தண்​ணீரை திறந்​து​விட்​டாலும் கடைக்கோடி​ மக்​களுக்​கு நீர்​ போய்​ சேர்​வது எளி​தாக இருக்​காது. இவ்வாறு கூறினார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் செங்கோட்டையன் </p></div>
“முட்டாள்தனமான விதிமீறல்!” - ஹார்முஸ் ஜலசந்தியில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in