தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் நடவடிக்கை என எச்சரிக்கை

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் நடவடிக்கை என எச்சரிக்கை
Updated on
2 min read

சென்னை: ‘தமிழகத்​தில் பெட்​ரோல், டீசல் தட்​டுப்​பாடு இல்​லை; பொது​மக்​களிடம் வதந்தி பரப்​பி​னால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என்று எண்​ணெய் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்தி வரும் தீவிர போர் தாக்​குதலால், இந்​தியா உள்பட பல்​வேறு நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் தடைபட்​டுள்​ளது. இதனால் சமையல் எரி​வாயு பற்​றாக்​குறை ஏற்​பட்​டு, வணிக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. வீட்டு உபயோக சிலிண்​டர் மட்​டும் கட்​டுப்​பாடு​களு​டன் பொது​மக்​களுக்கு விநி​யோகிக்​கப்​படு​கின்​றன.கொள்​கிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்​கிடையே பெட்​ரோல், டீசலுக்​குத் தட்​டுப்​பாடு ஏற்​படப் போவ​தாக​வும், அதன் விலை உயரப் போவ​தாக​வும் சமூக வலை​தளங்​களில் பரவியது. இதனால் அதிர்ச்​சி​யடைந்த மக்​கள், சென்னை உள்பட தமிழகத்​தின் பல்​வேறு நகரங்​களில் உள்ள

பெட்​ரோல் பங்க்​கு​களில் நேற்று முன்​தினம் இரவு முதலே குவி​யத் தொடங்​கினர். குறிப்​பாக, சென்​னை​யில் பல இடங்​களில் உள்ள பெட்​ரோல் பங்க்​கு​களில் பைக்​கு​கள், கார்​களில் பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்​து, எரிபொருளை நிரப்​பினர்.

எழும்​பூர், சேத்​துப்​பட்​டு, நுங்​கம்​பாக்​கம், அண்​ணா​சாலை, கோடம்​பாக்​கம், சைதாப்​பேட்​டை, கிண்​டி, ராயப்​பேட்​டை, அம்​பத்​தூர், முகப்​பேர், அண்​ணா நகர் உள்பட பல்​வேறு இடங்​களில் உள்ள பெட்​ரோல் பங்க்​கு​களில் கூட்​டம் அலைமோ​தி​யது. சிலர் கேன்​களில் பெட்​ரோல் வாங்க வந்​தனர். அவர்​களுக்கு பெட்​ரோல் வழங்க மறுத்​த​தால், ஊழியர்​களிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர்.

இதே​போல், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திருச்சி உள்பட பல்​வேறு நகரங்​களில் உள்ள பங்க்​கு​களில் பெரு​மள​வில் மக்​கள் குவிந்​த​தால், போக்​கு​வரத்து நெரிசலும் ஏற்​பட்​டது.

இதற்​கிடையே, எரிபொருள் தட்​டுப்​பாடு அச்​சத்​தில், சென்​னை​யில் பல இடங்​களில் பொது​மக்​கள் தங்​கள் பைக்​கு​கள், கார்​களை அருகே உள்ள மெட்ரோ நிலைய பார்க்​கிங்​கில் நிறுத்​தி​ விட்​டு, மெட்ரோ ரயி​லில் பயணித்தனர். இதனால், ஆலந்​தூர், பரங்​கிமலை, சென்ட்​ரல், கோயம்​பேடு உள்பட பல மெட்ரோ ரயில் நிலைய பார்க்​கிங்​கில் வாக​னங்​களை நிறுத்த முடி​யாமல் வழக்​க​மாக வரும் பயணி​கள் சிரமப்​பட்​டனர்.

எரிபொருள் இருப்பு குறித்​து, தமிழக பெட்​ரோலிய விற்​பனை​யாளர் சங்க மாநிலத் தலை​வர் முரளி கூறிய​தாவது:

90 நாட்களுக்கு இருப்பு: நாடு முழு​வதும் அடுத்த 90நாட்​களுக்​குத் தேவை​யான பெட்​ரோல் மற்​றும் டீசல் கையிருப்பு உள்​ளது. சென்னை முதல் கன்​னி​யாகுமரி வரை உள்ள 7 ஆயிரம் பெட்​ரோல் பங்க்​கு​களி​லும் விநி​யோகம் சீராக நடை​பெறுகிறது. மக்​கள் தேவைக்கு அதி​க​மாக வாங்​கு​வ​தால் செயற்கை தட்​டுப்​பாடு உரு​வாகும் நிலை ஏற்​படக்கூடும். மேலும், கேன் மற்​றும் பாட்​டில்​களில் பெட்​ரோல் வாங்​கு​வது மிக​வும் ஆபத்​தானது. தமிழகத்​தில் பெட்​ரோல், டீசல் இப்​போதைக்கு தட்​டுப்​பாடு இல்​லை. தமிழகத்​தில் உள்ள 14 முனை​யங்​களில் 21 நாட்​களுக்​குத் தேவை​யான அளவு எரிபொருள் இருப்பு உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பெட்​ரோல், டீசல் மற்​றும் பிற பெட்​ரோலியப் பொருட்​கள் போது​மான அளவு இருப்​பில் உள்​ளன. மேலும், நாடு முழு​வதும் விநி​யோக நடவடிக்​கைகள் சீராக உள்​ளன. வாடிக்​கை​யாளர்​கள் வதந்​தி​களைப் புறக்​கணித்​து, எரிபொருள் நிலை​யங்​களில் தேவையற்ற கூட்​டத்தை தவிர்க்க வேண்​டும்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யன் ஆயில் நிறுவன அதி​காரி​கள் சிலர் கூறும்​போது, “தமிழகத்​தில் பெட்​ரோல், டீசல் தட்​டுப்​பாடு என்று சமூக ஊடகங்​களில் தவறான தகவல்​களைப் பரப்​பு​கின்​றனர். இதனால், நெருக்​கடி​யான சூழ்​நிலை ஏற்​படு​கிறது. இது​போன்ற வதந்​தி​களைப் பரப்​புபவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றனர்.

பதற்றம் அடைய வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழக மக்​களுக்கு வேண்​டு​கோள் விடுத்து முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்​காசி​யப் போர்ச்​சூழல் காரண​மாக, தற்​போது ஏற்​பட்​டிருக்​கும் நெருக்​கடிகளை எதிர்​கொள்ள, 2 நாட்​களுக்கு முன்பு உயர்​மட்ட ஆலோ​சனை மேற்​கொண்​டதோடு, சமையல் எரி​வாயு சிலிண்​டர் தட்​டுப்​பாடு, பெட்​ரோல் - டீசல் உள்​ளிட்ட எரிபொருள் விநி​யோகம் குறித்து பிரதமருக்​கும், தொடர்​புடைய மத்​திய அமைச்​சர்​களுக்​கும் கடிதம் எழு​தி​யுள்​ளேன். தமிழக உணவுத்​துறை அமைச்​சர் சக்​கர​பாணி தலை​மை​யில் எரி​வாயு தட்​டுப்​பாட்டை எதிர்​கொள்​வது குறித்த ஆலோ​சனைக் கூட்​ட​மும் நேற்று முன்​தினம் நடை​பெற்​றுள்​ளது.

போது​மான எரிபொருள் கையிருப்​பில் உள்​ள​தாக மத்​திய அரசின் சார்​பில் தெரிவிக்​கப்​பட்டு வரும் நிலை​யில், பொது​மக்​கள் யாரும் அச்​சப்​பட​வோ, பதற்​றம் கொள்​ளவோ வேண்​டாம் என கேட்​டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் நடவடிக்கை என எச்சரிக்கை
iQOO Z11x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in