

iQOO Z11x ஸ்மார்ட்போன்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z11x ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z11x ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் iQOO Z10x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது. இந்நிலையில், பேட்டரி, கேமரா, சிப்செட் உட்பட முந்தைய மாடலை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட மாடலாக iQOO Z11x ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மூன்று விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் இரண்டு வண்ணங்களில் இந்த போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது.
iQOO Z11x ஸ்மார்ட்போன் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.76 இன்ச் டிஸ்பிளே
மீடியாடெக் டிமான்சிட்டி 7400 டர்போ சிப்செட்
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
6ஜிபி / 8ஜிபி ரேம்
128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
50 + 2 மெகாபிக்சல் என பின்புறம் இரண்டு கேமரா உள்ளது
32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
7200mAh பேட்டரி
44 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இந்த போனின் விலை ரூ.18,999 முதல் தொடங்குகிறது