கர்நாடக மாநில அரசு மேகேதாட்டு அணை கட்டினால் அமைச்சர் பதவியை துறப்பேன்: அமைச்சர் எஸ்.ராஜேஷ்குமார் உறுதி

கர்நாடக மாநில அரசு மேகேதாட்டு அணை கட்டினால் அமைச்சர் பதவியை துறப்பேன்: அமைச்சர் எஸ்.ராஜேஷ்குமார் உறுதி
Updated on
1 min read

திருவள்ளூர்: கர்நாடக மாநில அரசு, மேகேதாட்டு அணையை கட்​டி​னால், தனது அமைச்​சர் பதவியை துறக்க தயா​ராக இருப்பதாக சுற்​றுலாத்​ துறை அமைச்​சர் எஸ்​.​ராஜேஷ்கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சுற்​றுலாத் துறை அமைச்​ச​ராக இருப்​பவர், காங்​கிரஸ் கட்​சியை சேர்ந்த எஸ். ராஜேஷ்கு​மார். இவர் முதன் முதலாக நேற்று திரு​வள்​ளூரில் உள்ள திரு​வள்​ளூர் வடக்கு மாவட்ட காங்​கிரஸ் அலு​வல​கத்​துக்கு வருகை தந்​தார். அப்​போது, அவரை காங்​கிரஸ் கட்சி நிர்​வாகி​கள் வரவேற்​றனர்.

தொடர்ந்து, அங்​குள்ள சுதந்​திரப் போராட்ட தியாகி​கள், காங்​கிரஸ் தலை​வர்​களின் படங்​களுக்கு மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். பிறகு, அமைச்​சர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தமிழகத்​தில் பல்​வேறு மாநிலங்​கள் மற்​றும் வெளி​நாட்டு சுற்​றுலாப் பயணி​களை ஈர்க்​கும் வகை​யில் சுற்​றுலாத் துறை மூலம் பல்​வேறு பணி​களை மேற்​கொள்ள திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் பூண்டி ஏரி, கூடி​யம் குகை, பழவேற்​காடு பறவை​கள் சரணால​யம் ஆகியவற்றை பார்​வை​யிட்டு என்​னென்ன பணி​கள் மேற்​கொள்​ளலாம் என்​பது குறித்து ஆய்வு செய்ய உள்​ளேன்.

அதற்கு முன்​ன​தாக, நாளை (இன்​று) சட்​டப்​பேரவை கூட்​டத் தொடர் ஆளுநர் உரை​யுடன் தொடங்க உள்​ளது. அதைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை தாக்​கலுக்கு பின் சுற்​றுலாத்​துறை​யில் பல்​வேறு திட்​டங்​கள் தமிழக முதல்​வ​ரால் அறிவிக்​கப்பட உள்​ளன.

கர்​நாடக மாநில அரசு, மேகேதாட்டு அணையை எக்​காரணம் கொண்​டும் தமிழக அரசின் அனு​ம​தி​யின்றி கட்ட முடி​யாது. தமிழக அரசின் அனு​ம​தி​யில்​லாமல், கர்​நாடக அரசு அணையை கட்​டி​னால் எனது அமைச்​சர் பதவியை துறக்கத் தயா​ராக உள்​ளேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இந்​நிகழ்​வில், திரு​வள்​ளூர் வடக்கு மாவட்ட காங்​கிரஸ் தலை​வர் சசிகு​மார், முன்​னாள் மாவட்ட தலை​வர் சிதம்​பரம், இளைஞர் காங்​கிரஸ் மாநில பொதுச்​செய​லா​ளர்​ தி​வாகர்​ பங்​கேற்​றனர்​.

கர்நாடக மாநில அரசு மேகேதாட்டு அணை கட்டினால் அமைச்சர் பதவியை துறப்பேன்: அமைச்சர் எஸ்.ராஜேஷ்குமார் உறுதி
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 50 ஆயிரம் இவிஎம்களை சொந்தமாக வாங்கியது: காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சிகளுக்கு அனுப்பி வைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in