தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 50 ஆயிரம் இவிஎம்களை சொந்தமாக வாங்கியது: காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சிகளுக்கு அனுப்பி வைப்பு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 50 ஆயிரம் இவிஎம்களை சொந்தமாக வாங்கியது: காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சிகளுக்கு அனுப்பி வைப்பு
Updated on
2 min read

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்​தல் ஆணை​யம், 50 ஆயிரம் மின்​னணு வாக்​குப் பதிவு இயந்​திரங்களை (இவிஎம்) சொந்​த​மாக வாங்​கி​யுள்​ளது. அவை நேற்று காஞ்​சிபுரம் மாவட்​டத்​தி​லுள்ள உள்​ளாட்​சிகளுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.

தமிழகத்​தில் 21 மாநக​ராட்​சிகள், அவற்​றில் 1374 வார்​டு​கள், 138 நகராட்​சிகள், அவற்​றில் 3843 வார்​டு​கள், 490 பேரூ​ராட்​சிகளில் 7621 வார்​டு​கள் உள்​ளன.

மாநிலத்​தில் சென்னை தவிர உள்ள 37 மாவட்​டங்​களில் 655 மாவட்ட ஊராட்சி வார்​டு​கள், 388 ஊராட்சி ஒன்​றி​யங்​களில் 4671 ஊராட்சி ஒன்​றிய வார்​டு​கள்,12525 ஊராட்​சிகளில், 12525 ஊராட்​சி மன்ற தலை​வர் பதவி​கள், 99327 கிராம ஊராட்சி வார்​டு​கள் உள்​ளன.

ஆக மொத்​தம் நகர்ப்​புற உள்​ளாட்​சிகள் மற்​றும் ஊரக உள்​ளாட்​சிகளில் 1,31,816 பதவி​களுக்கு நேரடி தேர்​தலும், 14,673 பதவி​களுக்கு மறை​முக தேர்​தலும் நடத்​தப்​படு​கிறது. தமிழகத்​தில் அனைத்து உள்​ளாட்​சிகளுக்​கும் அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் தேர்​தல் நடத்த மாநில தேர்​தல் ஆணை​யம் நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

ஊரகப் ​பகு​தி​களில் ஊராட்சி வார்டு உறுப்​பினர், ஊராட்சி மன்​றத் தலை​வர், ஒன்​றியக்​குழு உறுப்​பினர், மாவட்ட ஊராட்சி உறுப்​பினர் என 4 பேரை தேர்வு செய்ய வேண்டி இருப்​ப​தால், 4 வாக்​கு​களை அளிக்க வேண்​டி​யுள்​ளது.

<div class="paragraphs"><p>மாநில தேர்தல் ஆணையம் வாங்கியுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.</p></div>

மாநில தேர்தல் ஆணையம் வாங்கியுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.

அதனால், இது​நாள் வரை வாக்​குச்​சீட்டு மூல​மாகவே அங்கு உள்​ளாட்சி தேர்​தல்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. நடக்க இருக்​கும் நகர்ப்​புற உள்​ளாட்​சித் தேர்​தல்​கள் அனைத்​தி​லும் இவிஎம்​கள் பயன்​படுத்​தப்​படு​கிறது.

இது​வரை நடை​பெற்ற நகர்ப்​புற உள்​ளாட்சி தேர்​தல்​களுக்கு தேவை​யான இவிஎம்​கள் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​திட​மிருந்து பெறப்​பட்டு வந்​தன. இந்​நிலை​யில், தற்​போது சொந்​த​மாக இயந்​திரங்​களை வாங்கி பயன்​படுத்த மாநில தேர்​தல் ஆணை​யம் நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

அதன் ஒரு பகு​தி​யாக, புதி​தாக வாங்​கப்​பட்ட இயந்​திரங்​கள் நேற்று காஞ்​சிபுரம் மாவட்​ட நகரப்​புற உள்​ளாட்​சிகளுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. இது தொடர்​பாக மாநில தேர்​தல் ஆணை​யர் ஜோதி நிர்​மலா சாமி​ கூறிய​தாவது: மாநில தேர்​தல் ஆணை​யம் சார்​பில் ஏற்​கெனவே 2500 இவிஎம்​கள் வாங்​கப்​பட்​டு, பயன்​படுத்​தப்​பட்டு வந்தன.

இப்​போது கூடு​தலாக 50 ஆயிரம் இவிஎம்​களை, இந்​திய தேர்​தல் ஆணை​யத்​துக்கு தயாரித்து வழங்​கும் அதே பெல் (BEL) நிறு​வனத்​திடம் வாங்கி இருக்​கிறோம்.

தமிழக உள்​ளாட்சி தேர்​தல்​களில் படிப்​படி​யாக 100 சதவீதம், சொந்த இவிஎம்​களை பயன்​படுத்த வேண்​டும் என்ற நோக்​கத்​தில் இந்த இவிஎம்​கள் படிப்​படி​யாக வாங்​கப்​பட்டு வரு​கின்​றன.

இவற்றை 15 ஆண்​டு​கள் தோராய​மாக 3 தேர்​தல்​களுக்கு பயன்​படுத்த முடி​யும். தற்​போது வந்​துள்ள இவிஎம்​கள் மாவட்​ட வாரி​யாக அனுப்​பப்​பட்​டு வரு​கின்றன என்றார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 50 ஆயிரம் இவிஎம்களை சொந்தமாக வாங்கியது: காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சிகளுக்கு அனுப்பி வைப்பு
பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு ‘டோட்டல் ஃபெயில்’ - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in