சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை திமுக புறக்கணித்தது வேதனை அளிக்கிறது: காங்கிரஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை திமுக புறக்கணித்தது வேதனை அளிக்கிறது: காங்கிரஸ்
Updated on
1 min read

சென்னை: “சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அரசினர் தனித்தீர்மானத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுகவின் செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணியில், மாநில, மத்திய அரசுகளால் அறிவிக்கை செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களைக் கணக்கெடுப்புச் செயலியில் முன்னரே பதிவேற்றம் செய்து துல்லியமான விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் 'திறந்தவெளிப் பதிவு முறையை' கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானத்தை வரவேற்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேசி, சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

ஆனால் இன்று நிகழ்ச்சி நிரலில் இத்தீர்மானம் முன்கூட்டியே தெளிவாக இடம்பெற்றிருந்தும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்கு வராததோடு, முந்தைய நிகழ்வுகளைக் காரணம் காட்டி திமுகவினர் ரகளை செய்து, இன்று இந்த தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவையில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை திமுக புறக்கணித்தது வேதனை அளிக்கிறது: காங்கிரஸ்
“மிசா கொடுமைகளை முதல்வர் விஜய் அரை மணி நேரம் தாங்குவாரா?” - கே.பாலகிருஷ்ணன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in