காட்டுமன்னார்கோவில்: கடித்த பாம்பை கையில் எடுத்துக் கொண்டு வலம் வந்த ஆசாமி

காட்டுமன்னார்கோவில்: கடித்த பாம்பை கையில் எடுத்துக் கொண்டு வலம் வந்த ஆசாமி
Updated on: 
1 min read

கடலூர்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பெரியகுளம் அருகில் பெட்ரோல் பங்கில் இருந்த புல்வெளியில் நுழைந்த 6 அடி நீள பாம்பு ஒன்றை குப்பங்குழி கிராமத்தைச் சேர்ந்த அழகானந்தம் (55) என்பவர், கழுத்தை அழுத்திப் பிடித்தார்.

அப்போது பாம்பு அழகானந்தத்தின் வலது கை நடுவிரலில் கடித்ததால் ரத்தம் சொட்டியது. அதைப் பொருட்படுத்தாமல் பாம்பை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு நடந்தே சென்றார்.

ரத்தம் சொட்டுவதை கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் திகைத்தனர். தீயணைப்பு அதிகாரிகள் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அவரைக் கடித்த பாம்பு சாரைப் பாம்பு வகையைச் சேர்ந்ததால் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பினார்.

காட்டுமன்னார்கோவில்: கடித்த பாம்பை கையில் எடுத்துக் கொண்டு வலம் வந்த ஆசாமி
கரூர் கோயில் நிலம் மீட்பு நடவடிக்கை தாமதம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in