கரூர் கோயில் நிலம் மீட்பு நடவடிக்கை தாமதம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்ப்பு

கரூர் கோயில் நிலம் மீட்பு நடவடிக்கை தாமதம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்ப்பு
Updated on: 
1 min read

மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் நூறு ஆண்டுகள் பழமையானது.

இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கக்கோரி 2018 ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தேன். இதனை விசாரித்த நீதிபதிகள், 12 வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இருப்பினும் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் கே.எஸ்.பழனிசாமி (வருவாய்த் துறை செயலர்), ஏ.கார்த்திக் (உள்துறை செயலர்), வி.ராஜாராமன் (அறநிலையத்துறை செயலர்), பி.சந்திரமோகன் (வருவாய் நிர்வாக ஆணையர்), ராஜேஷ் லக்கானி (நில நிர்வாக ஆணையர்), டி.ஜி.வினய் (அறநிலையத்துறை ஆணையர்), கரூர் மாவட்ட ஆட்சியர் சி.முத்துக்குமரன் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் (மத்திய மண்டல ஐஜி) ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் வரும் நவ.5-ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவு ஏன் நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கரூர் கோயில் நிலம் மீட்பு நடவடிக்கை தாமதம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்ப்பு
செஞ்சி சிறுமியை பெங்களூருவில் தேடும் சிபிசிஐடி போலீஸார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in