“2011-ல் தேமுதிக இல்லையென்றால் இன்றைக்கு அதிமுக கிடையாது” - எல்.கே.சுதீஷ் கருத்து

எல்.கே.சுதீஷ் |கோப்புப் படம்

எல்.கே.சுதீஷ் |கோப்புப் படம்

Updated on
1 min read

“கடந்த 2011 தேர்​தலில் தேமு​திக இல்​லை​யென்​றால் இன்​றைக்கு அதி​முக கிடை​யாது” என தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு பதிலளித்​துள்​ளார்.

சட்​டப் பேர​வைத் தேர்​தலுக்​கான தனது பிரச்​சா​ரத்தை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று முன்​தினம் மயி​லாப்​பூரில் இருந்து தொடங்​கி​னார். அப்​போது தேமு​தி​க-வை மறை​முக​மாக விமர்​சிக்​கும் வகை​யில், "அங்​கீ​காரம் இல்​லாத கட்​சிகளுக்கு திமுக கூட்​ட​ணி​யில் அதிக இடங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன" என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களின் கேள்விக்​குப் பதிலளித்த எல்​.கே.சுதீஷ், “கடந்த 2011-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேமு​திக மட்​டும் அதி​முக-வுடன் கூட்​டணி வைக்​காமல் இருந்​திருந்​தால், அதி​முக-​வால் ஆட்சி அமைத்​திருக்​கவே முடி​யாது. 2011-ல் தேமு​திக இல்லை என்​றால் இன்​றைக்கு அதி​முக இல்​லை.

நாங்​கள் எதிர்​பார்த்த மற்​றும் விரும்​பிக் கேட்ட தொகு​தி​களில் சுமார் 70 சதவீத இடங்​களை வழங்க திமுக ஒப்​புக்​கொண்​டிருப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது. அதி​முக கூட்​ட​ணி​யில் கட்​சிகளுக்கு உரிய மரி​யாதை கிடைப்​ப​தாக பழனி​சாமி கூறு​வது உண்மை இல்​லை. தற்​போதைய சூழலில் திமுக உடனான தொகு​திப் பங்​கீடு திருப்​தி​கர​மாக இருக்​கிறது" என்று சொன்​னார்​.

<div class="paragraphs"><p>எல்.கே.சுதீஷ் |கோப்புப் படம்</p></div>
தவெகவில் இணைந்த முன்னாள் காங். நிர்வாகி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in