தவெகவில் இணைந்த முன்னாள் காங். நிர்வாகி

தவெகவில் இணைந்த முன்னாள் காங். நிர்வாகி
Updated on
1 min read

​காங்​கிரஸில் இருந்து நீக்​கப்​பட்ட முன்​னாள் மாநில பொதுச் செய​லா​ளர் டி.செல்வம் நேற்று தவெக தலை​வர் விஜய் முன்​னிலை​யில் அக்​கட்​சி​யில் இணைந்​தார்.

தவெக​வில் சேரப்​போவ​தாக வெளி​யான தகவலை​யடுத்​து, காங்​கிரஸின் மாநில பொதுச் செய​லா​ள​ராக இருந்து வந்த டி. செல்​வத்தை மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கட்​சி​யில் இருந்து நீக்​கி​னார். இந்​நிலை​யில், விஜய் முன்​னிலை​யில் டி.செல்​வம் நேற்று தவெக​வில் இணைந்​தார். அவருடன் காங்​கிரஸ் தொண்​டர்​கள் பலரும் இணைந்​தனர்.

நிகழ்ச்​சி​யில் பேசிய டி.செல்​வம், “தவெக​வுடன் கூட்​டணி வைக்க ராகுல் காந்தி நினைத்​தார். ஒருசிலரின் சுயநலத்​துக்​காக காங்​கிரஸை திமுக​விடம் அடகு வைத்​திருக்​கி​றார்​கள். திமுக வுடன் கூட்​டணி வைத்​ததை பெரும்​பாலான காங்​கிரஸ் கட்​சி​யினர் விரும்​ப​வில்​லை” என்​றார்.

தவெகவில் இணைந்த முன்னாள் காங். நிர்வாகி
சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆயத்தம்: கிருஷ்ணசாமி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in