கிழிந்து தொங்கும் திமுக கொடியை மாற்ற ஆளில்லை: உண்மையை பேசவிடுமா ‘உடன்பிறப்பின் குரல்’?

கிழிந்து தொங்கும் திமுக கொடியை மாற்ற ஆளில்லை: உண்மையை பேசவிடுமா ‘உடன்பிறப்பின் குரல்’?
Updated on
2 min read

“தோல்​விக்கு நானே பொறுப்​பேற்​றுக் கொள்​கிறேன்” என்று சொல்லி இருக்​கும் திமுக தலை​வர் ஸ்டாலின், தோல்விக்​கான காரணங்​களை தொகுதி வாரி​யாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்​பிக்க 38 பேர் கொண்ட 19 குழுக்​களை அமைத்​திருக்​கிறார். கூட​வே, தொண்​டர்​கள் தங்​களது கருத்​துகளை தங்​கள் குரலிலேயே பதிவு செய்ய ‘உடன் பிறப்​பின் குரல்’ என்ற பிரத்​யேக இணை​யதளத்​தை​யும் தொடங்கி இருக்​கிறார்.

தோல்விக்​கான காரணத்தை தேடும் முன்​பு, எங்கே சறுக்கி இருக்​கிறோம் என்​பதை திமுக தலை​மை​யும் சுயபரிசோதனை செய்​து​கொள்ள வேண்​டிய நேரம் இது. மற்ற கட்​சிகளில் இல்​லாத கருத்​துச் சுதந்​திரம் திமுக-​வில் உண்​டு. யாராக இருந்​தா​லும் அவர்​களை​யும் பேச​விட்டு மாற்​றுக் கருத்​துக்​கும் மதிப்​பளிப்​பார் திமுக முன்​னாள் தலை​வர் கருணாநி​தி.

கட்​சி​யின் அடிமட்​டத்​தில் நடக்​கும் சமாச்​சா​ரங்​கள் அப்​படியே தனது கவனத்​துக்கு வந்​து சேர வேண்​டும் என்​ப​தற்​காகவே, மாவட்​டச் செய​லா​ளர்​களுக்கு போட்​டி​யாக வளர்​பவர்​களை​யும் பொத்​திப் பாது​காத்​தார் கருணாநி​தி. அவர்​களால் பல நேரங்​களில் கட்​சிக்​குள் குத்​து​வெட்​டு​கள் நடந்​தா​லும் கட்​சியை போட்​டி​போட்​டுக் கொண்டு வளர்த்​தார்​கள்.

ஒற்றை பீடியை உள்ளே இழுத்​துக் கொண்​டே, தேர்​தல் கருத்​துக் கணிப்பை சொல்​லி​விடக் கூடிய சூரப்​புலிகள் திமுக-​வில் இருந்த கால​மும் உண்​டு. என்​றைக்கு கமர்​ஷிய​லான வியூக வகுப்​புக் கம்​பெனிகள் கட்​சிக்​குள் ஊடுருவி ‘கட்​டளை​களை’ பிறப்​பிக்க ஆரம்​பித்​தார்​களோ அப்​போதே கட்​சி​யின் அந்த ஆரோக்​கி​யம் கெட்​டு​விட்​டது. ‘அனைத்​தை​யும் மேலே இருப்​பவன் பார்த்​துக்​கு​வான்’ பாணி​யில் கட்சி நிர்​வாகி​கள் பலரும் சொகுசுக் காரில் பவனி வர ஆரம்​பித்​த​தால் கம்​பங்​களில் கிழிந்து தொங்​கும் கறுப்பு சிவப்​புக் கொடியை மாற்​றக்​கூட ஆளில்​லாமல் போனது.

கடைசி வரை, கலர் மங்​கிப் போன சாதாரண கரைவேட்டி தான் கருணாநி​தி​யின் அடை​யாளம். ஆனால், வியூகப் புலிகள் சொல்​கிறார்​கள் என்​ப​தற்​காக அவர்​கள் சொன்ன இடத்​தில் சைக்​கிள் ஓட்​டினீர்​கள், வாக்​கிங் போனீர்​கள், டீ குடித்​தீர்​கள், செல்ஃபி எடுத்​தீர்​கள். இன்​றைக்கு ரீல்ஸ் ஆட்சி நடத்​து​வ​தாக விஜய்யை விமர்​சிக்​கும் நீங்​கள், இயல்​புக்கு மாறாக இதையெல்​லாம் செய்​ததும் ஆட்​சியை பிடிக்​கத்​தானே என்று திருப்​பிக் கேட்​டால் என்ன பதில் சொல்​வீர்​கள்?

நீங்​கள் இப்​படி போட்​டோ, வீடியோ ஷூட்டை விரும்​பு​கிறீர்​கள் என்​றதும் மாவட்​டச் செய​லா​ளர்​களும் தலைக்கு 300 ரூபாய் கொடுத்து ஆட்​களை திரட்டி உங்​களுக்கு போலி​யான பிம்​பத்தை கட்​டமைத்​துக் காட்​டி​னார்​கள்.

அதனால் உங்​களுக்கு உண்மை நில​வரம் தெரி​யாமல் போனது. நிறை குறை​களைச் சொல்ல நினைப்​பவர்​களை ஊக்​கப்​படுத்​தாமல் விட்​ட​தால் மாவட்​டச் செய​லா​ளர்​கள் சொல்​வதை மட்​டுமே நம்ப வேண்​டிய சூழல் உங்​களுக்கு ஏற்​பட்​டது. அப்​படியே எங்​காவது ஓரிரு​வர் எதிர்த்​துக் கிளம்​பி​னாலும் அவர்​களை எல்​லாம் மாவட்​டச் செய​லா​ளர்​கள் அடக்கி ஆண்​டார்​கள். உண்​மை​யைச் சொல்​பவர்​கள் மீது ‘உள்​ளடி வேலை’ முத்​திரை குத்​தப்​பட்​டது.

மீண்​டும் மீண்​டும் தாங்​களே அமைச்​ச​ராக வேண்​டும் என நினைத்​தவர்​கள், தங்​கள் மாவட்​டத்​தில் யாரும் அந்த இடத்​துக்கு உயர்ந்​து​விடக் கூடாது என்​ப​தில் கவன​மாக இருந்​தார்​கள்.எதிர்க் கட்​சி​யுடன் ‘ஒப்​பந்​தம்’ பேசி தங்​கள் தொகு​தி​யில் ‘சொத்​தை​யான’ வேட்​பாளர்​களை நிறுத்​திக் கொண்​டார்​கள்; சொந்​தக் கட்​சிக்​குள் உள்ள தங்​களின் போட்​டி​யாளர்​களை எதிர்​மு​காமில் வலு​வானவர்​களை நிறுத்தி சாய்க்​க​வும் மெனக்​கிட்​டார்​கள். கட்​சிக்​காக சிறை சென்ற பாரம்​பரிய திமுக குடும்​பங்​கள் பலவற்றை காணா​மலே செய்​து​விட்​டார்​கள்.

இதையெல்​லாம் கவனிக்​கத் தவறிய நீங்​கள் தேர்​தல் நேரத்​தில், ‘உடன்​பிறப்பே வா’ என்று சொல்லி நிர்​வாகி​களை அழைத்​துக் கருத்​துக் கேட்​டீர்​கள். அதி​லும் மாவட்​டச் செய​லா​ளர்​களுக்கு சிலர் ‘துப்​புக்’ கொடுத்​த​தால் உள்​ளதைச் சொல்ல வந்​தவர்​களும் உங்​களிடம் உண்​மை​யைச் சொல்​லாமலேயே திரும்​பி​னார்​கள். தேர்​தலில் இம்​முறை கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கும் ‘தா​ராள​மாக’ செலவு செய்​தீர்​கள். ஆனால் அதை, “எங்க பணம் தானே” என்று சொல்லி பதுக்​கிக் கொண்ட திமுக நிர்​வாகி​களை என்ன செய்​யப் போகிறீர்​கள்? கூட்​ட​ணிக் கட்​சி​யினரைக் கேட்​டால் இதையெல்​லாம் கதை கதை​யாய் சொல்​வார்​கள்.

தோல்விக்​கான காரணத்தை தேடும் முன்​பாக கூட்​ட​ணிக் கட்​சிகளை ஜெயிக்க வைத்​து​விட்​டு, “நம்​மால் ஜெயித்​து​விட்டு இப்​படிப் போய்​விட்​டார்​களே...” என்று வேதனை​யில் இருக்​கும் திமுக-​வினரை முதலில் அழைத்து ஆறு​தல் படுத்​துங்​கள். ஏனென்​றால், அவர்​களெல்​லாம் நீங்​கள் சொன்​ன​தால் கூட்​ட​ணிக்​காக உழைத்​து​விட்டு ‘கொளத்​தூர்​ வேதனைக்​கு’ நிக​ரான வலி​யில்​ உழன்​று கொண்​டுள்ளனர்​.ஆக, வேர்​ப்​ புழு​வுக்​கு வைத்​தி​யம்​ ​பார்​க்​​காமல்​ மேலோட்​ட​மாக மகசூலுக்​கு மருந்​தடிப்​பது நீடித்​த பலனைத்​ த​ராது என்​ப​தை புரிந்​து கொண்​டு அப்​டேட்​ ஆக வேண்​டும்​ முன்​​னாள்​ முதல்​வர்​ ஸ்​​டாலின்​.

கிழிந்து தொங்கும் திமுக கொடியை மாற்ற ஆளில்லை: உண்மையை பேசவிடுமா ‘உடன்பிறப்பின் குரல்’?
சனாதனத்தை சாதிக்குள் அடைக்க முயற்சி: தமிழக பாஜக குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in