சனாதனத்தை சாதிக்குள் அடைக்க முயற்சி: தமிழக பாஜக குற்றச்சாட்டு

சனாதனத்தை சாதிக்குள் அடைக்க முயற்சி: தமிழக பாஜக குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: சனாதனத்தை சாதிக்​குள் அடைக்க முயற்சி நடப்​ப​தாக தமிழக பாஜக தலைமை செய்​தித் தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வட இந்​தி​யா​வில் சனாதனம் என்​றால் இந்​து. தென் இந்​தி​யா​வில் சனாதனம் என்​றால் சமத்​து​வ​மின்மை என்​கிறார் தவெக​வின் ஆதவ் அர்​ஜு​னா. அவர் இப்​படி சொல்​லி​யிருப்​பது அவரது அறி​யாமை​யால் அல்ல. இந்து மதத்​தின் மீது அவருக்கு இருக்​கும் வெறுப்​பி​னாலும், பிரி​வினை மனப்​பான்​மை​யி​னாலும்​தான். சாதி ஏற்​றத்​தாழ்​வு​கள் எல்லா மதத்​தி​லும் உள்​ளன. அவற்றை சீர்​திருத்த வேண்​டுமேயன்றி வெறுப்பை உமிழ்​வது தவறு.

சமத்​து​வத்தை அறிய வேண்​டுமெனில் ராமானுஜரை, பார​தி​யாரை, ராஜாஜியை படி​யுங்​கள். அதை​விடுத்து உதயநிதி ஸ்டா​லின் கூறியதை வேறு வார்த்​தைகளில் திரும்​பக்​கூறி சாதிப் பிளவு​களை, பிரி​வினையை பேசுகிறீர்​கள் என்​பதே உண்​மை. சனாதனம் என்​பது தமிழகத்​தின் ஆன்மா என்​பதை அறிந்து கொள்​ளுங்​கள். வேதம், உபநிதம், திருக்​குறள், தேவாரம், திவ்​யப்​பிரபந்​தம், ராமாயணம், மகா​பாரதம் அனைத்​துமே சனாதனத்​தின் அங்​கம்.

காஞ்​சி, ராமேசுவரம், ஸ்ரீவில்​லிபுத்​தூர், மதுரை, திருப்​பதி இவை அனைத்​துமே சனாதனத்​தின் உயிர் நாடி. இந்​துத்​து​வாவை எதிர்க்​கிறோம் என்று கூறிக்​கொண்டு இந்​துக்​களை எதிர்க்​கிறீர்​கள், பழிக்​கிறீர்​கள், அவமானப்​படுத்​துகிறீர்​கள். 90 சதவீத தமிழர்​கள் பின்​பற்​றும் இந்து மதத்​தை, சனாதனத்தை சாதிக்​குள் அடைக்​கப் பார்க்​கிறீர்​கள். சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடி​யாது. உங்​கள் இந்து விரோத அரசி​யல்​தான் ஒழிந்​து​போகும்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சனாதனத்தை சாதிக்குள் அடைக்க முயற்சி: தமிழக பாஜக குற்றச்சாட்டு
தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வேண்டு​கோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in