“பொதுமக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் அவசியம்” - ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

Updated on: 
1 min read

கிருஷ்ணகிரி: “இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம்,” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போலுபள்ளியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், பெட்ரோல் பங்க் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீது வாக்காளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது.

ஜனநாயக முறைப்படி நேர்மையாகவும் நம்பிக்கையுடனும் தேர்தல்கள் நடைபெற வேண்டுமானால், ஆணையத்தில் அவசியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், தருமபுரியில் பழைய பேருந்து நிலையத்தை மீண்டும் அதே இடத்தில் உடனடியாகச் செயல்படுத்த தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், தொப்பூர் மேம்பாலம் மற்றும் நெடுஞ்சாலைப் பணிகளைத் தீவிரப்படுத்தி, உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்.

தமிழகத்தில் எந்தத் தரப்பு மக்களுக்கும் மின்வெட்டால் பாதிப்பு ஏற்படக் கூடாது. குறிப்பாகச் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படக் கூடாது. தற்போதைய சூழலில் மின் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கவும் மின்தேவையைச் சமாளிக்கவும் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேபோல், தமிழகத்தின் கடன் சுமையைப் படிப்படியாகக் குறைப்பதற்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்தி, மக்கள் மீது சுமை விழாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கனிவோடு பரிசீலித்து, அரசு உரிய தீர்வு காணும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.” என்று அவர் பேசினார்.

<div class="paragraphs"><p><em>ஜி.கே.வாசன்</em></p></div>
“எத்தனை இளைஞர்களின் குரலை பாஜகவால் ஒடுக்க முடியும்?” - மு.க.ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in