“எத்தனை இளைஞர்களின் குரலை பாஜகவால் ஒடுக்க முடியும்?” - மு.க.ஸ்டாலின்

சிஜேபிக்கு சட்ட உதவிகளை வழங்கத் தயார்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Updated on: 
1 min read

சென்னை: “எத்தனை இளைஞர்களின் குரலைத்தான் பாஜகவால் ஒடுக்க முடியும்? சிஜேபிக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் திமுக வழங்கும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எத்தனை போராட்டக்காரர்களை இந்த அரசால் கைது செய்ய முடியும்? எத்தனை இளைஞர்களின் குரலை பாஜகவால் ஒடுக்க முடியும்? அவர்கள் சிறையில் அடைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, எந்த அரசியல் கட்சியையும் சாராத சாதாரண பொதுமக்களும் பெருமளவில் வீதிக்கு வந்து, மக்கள் சக்தி என்னவென்பதை அவர்களுக்குக் காட்டுவார்கள்.

அஷுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோருக்கு எனது ஆதரவும் தோழமையும். அவர்களுக்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளை வழங்கவும், வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்யவும் திமுக தயாராக உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டெல்​லி​யில் ஜந்​தர் மந்​தர் பகு​தி​யில் நேற்று காலை ஒன்​றுகூடி போ​ராட்​டத்​தில்​ ஈடுபட முயன்​ற அசுதோஷ் ரங்​​கா, சவுரவ்​ ​தாஸ்​ மற்​றும்​ அஜிங்​க்​யா ஷிண்​டே உள்​ளிட்​ட சிஜேபி கட்​சி நிர்வாகிகளை டெல்​லி ​காவல்​துறை கைது செய்​தனர்.

டெல்லி காவல்​துறை திங்​கள்​கிழமையன்று ஜந்​தர் மந்​தரை போராட்​டங்​கள் நடத்​தும் அதி​காரப்​பூர்வ இடங்​களின் பட்டியலிலிருந்து நீக்​கியது. அதற்கு மாற்​றாக, போராட்​டங்​கள் நடத்த ராம் லீலா மைதானம், புராரி மைதானம் மற்​றும் கிழக்கு டெல்​லி​யில் உள்ள சி.பி.டி. மைதானம் ஆகிய மூன்று மாற்று இடங்களை அறி​வித்​தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “எத்தனை இளைஞர்களின் குரலைத்தான் பாஜகவால் ஒடுக்க முடியும்? சிஜேபிக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் திமுக வழங்கும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</p></div>
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: இன்று பவுனுக்கு ரூ.760 குறைந்தது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in