‘புத்தகங்கள் அடுக்கி வைக்க அல்ல; படிக்க வைக்க’ - வெ.இறையன்பு அறிவுறுத்தல்

‘புத்தகங்கள் அடுக்கி வைக்க அல்ல; படிக்க வைக்க’ - வெ.இறையன்பு அறிவுறுத்தல்

படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
2 min read

'புத்தகங்கள் அடுக்கி வைப்ப தற்கு அல்ல; மாறாக படிக்க வைப்பதற்கே' என்று சென்னை யில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு கூறினார்.

'இந்து தமிழ் திசை' பதிப்பகத் தின் வெளியீடான 'தன்னம்பிக்கையால் தலை நிமிர்' உட்பட எழுத்தாளரும். பேராசிரியருமான அ.முகமது அப்துல்காதர் எழுதிய 3 நூல்களின் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள எஸ்எஸ்எல்எஃப் சிட்டி அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த நூல்களை வெளியிட்டு, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு பேசியதாவது: நான் கடந்த 10 ஆண்டுகளாக கல்லூரி விழாக்களில் பங்கேற்று வருகிறேன். அங்கெல்லாம் அதிக இஸ்லாமிய பெண்கள் கல்வி பயில்வதைப் பார்க் கிறேன். பெண்களுக்கு வாழ்க் கையில் முன்னேற கல்வி ஒன்று தான் கைவிளக்காக இருக்கும் என்பதை அப்பெண்கள் அறிந்த காரணத்தினால்தான் கல்வியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டி ருக்கிறார்கள்.

புத்தகங்கள் அடுக்கி வைப்ப தற்காக அல்ல; மாறாக படிக்க வைப்பதற்காக என்பதை நாம் உணர வேண்டும். அறிவு தாகத் தைப் போக்கும் வகையில் புத் தகங்களைப் படிக்க வைக்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

பேராசிரியர் முகமது அப்துல் காதர் தனது தன்னம்பிக்கையால் தலைநிமிர்' நூலில், கொலம்பஸ், மேரி கியூரி, சார்லி சாப்ளின், பெர்னார்ட் ஷா, சுந்தர் பிச்சை போன்ற பல ஆளுமைகளின் சாதனைகளையும் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையும் விரிவாக விளக்கியுள்ளார். இளைஞர்கள் தங்கள் நிறத்தைப்பற்றியோ, உருவத்தைப் பற்றியோ கவலைப் படாமல் உழைத்தால், உலகம் ஒருநாள் உங்களைப் பாராட்டும் என்பதை உதாரணத்துடன் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், சிறகுவிரி, சிகரம் தொடு' நூலில் பல சுவையான சம்பவங்களையும் உதாரணங்களையும் காட்டியுள்ளார். எந்த பணியைச் செய்தாலும் ஒரு கட்டத்தில் முன்னேற முடியும் என்பதை நிரூபித்த 43 வயதில் பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜஸ் தான் பெண் தூய்மைப் பணியாளர் உஷா சவ்மர் 'உன்னால் எதுவும் முடியும்' நூலில் இடம் பெற்றுள்ளார், முதல் பழங்குடியின மாவட்ட நீதிபதி ஆகியுள்ள ஜவ்வாது மலையைச் சேர்ந்த ஸ்ரீபதியை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இப் படி எண்ணற்ற பெண்களின் சாதனைகளைச் சொல்லி, நாமும் அவ் வாறு முயற்சி செய்ய வேண்டும் என்று நம்மையும் ஊக்குவிக்கிறார் என்றார்.

எஸ்எஸ்எல்எஃப் சிட்டி நிறுவனர் ஜி.சக்திவேல், ஏஎம்எஸ் கல்வி குழும தலைவர் முகமது சாலிஹ், கிரசென்ட் பெண்கள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஷரிபா அஜீஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர், விழாவில், ஒர்க்ப்ரீக்ஸ் பிசினஸ் ஸ்கூல் நிறுவனர் செய்யது நசுருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, நூலாசிரியர் முகமது அப்துல்காதர் வரவேற்றுப் பேசினார். நிறைவாக, கல் வியாளர் தமிழரசி சிவகுமார் நன்றி கூறினார். எஸ்எஸ்எல் எஃப் சிட்டி துணைத்தலைவர் ஹரி பாலகிருஷ்ணன் நிகழ்ச்சி யைத் தொகுத்து வழங்கினார்.

நூலைப் பெற...: 'தன்னம்பிக்கையால் தலை நிமிர்' நூலை, store.hindutamil. in/publications என்ற ஆன்லைன் இணைப்பின் மூலம் வாங்கலாம். KSL MEDIA LIMITED என்ற பெயரில் எடுத்த D.D, Money order அல்லது Cheque முதலானவற்றை 'இந்து தமிழ் திசை நாளிதழ்', 124, வாலாஜா சாலை, சென்னை - 2 என்ற முகவரிக்கு அனுப்பியும் நூலைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ( 7401296562/7401329402/044-35048001 ஆகிய எண்களில் அழைக்கலாம்.

‘புத்தகங்கள் அடுக்கி வைக்க அல்ல; படிக்க வைக்க’ - வெ.இறையன்பு அறிவுறுத்தல்
ரொமான்டிக் கதையில் ‘பிக் பாஸ்’ விக்ரமன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in