ரொமான்டிக் கதையில் ‘பிக் பாஸ்’ விக்ரமன்!

ரொமான்டிக் கதையில் ‘பிக் பாஸ்’ விக்ரமன்!
Updated on
1 min read

‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை ப்ரீத்தி கரிகாலன் இயக்குகிறார். இதில், நாயகியாக சுப்ரிதாவும் முக்கிய வேடத்தில் ஜென்சன் திவாகரும் நடிக்கின்றனர்.

ரொமான்டிக் கதையைக் கொண்ட இந்தப் படத்தை கோல்டன் கேட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அஜீஷ் அசோகன் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இதுபற்றி தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் கூறும்போது, “குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிடுவதற்கான சரியான தருணத்தைத் திட்டமிட்டு வருகிறோம். இது ரசிகர்களுக்கு ஜாலியான அனுபவத்தைக் கொடுக்கும். படத்தின் தலைப்பு, டீஸர், டிரெய்லர் வெளியீடு குறித்து விரைவில் அறிவிப்போம்” என்றார்.

ரொமான்டிக் கதையில் ‘பிக் பாஸ்’ விக்ரமன்!
ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அபாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in