சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.618 கோடி வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை

சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.618 கோடி வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை
Updated on: 
1 min read

சென்னை: சென்னை ரயில்வே கோட்​டத்​தில் 2026 ஏப்​. முதல் செப்​.வரை 6 மாதங்​களில் சரக்கு போக்​கு​வரத்தால், ரூ.618.51 கோடி வரு​வாய் ஈட்​டப்​பட்​டுள்​ளது.

சுமார் 5.413 மில்​லியன் டன் எடையுள்ள அத்​தி​யாவ​சி​யப் பொருட்​கள், மின் உற்​பத்​தித் தேவைக்​கான பொருட்​கள், கனரக தொழில்​துறை சரக்​கு​கள் நாடு முழு​வதும் வெற்​றிகர​மாக கொண்டு சேர்க்​கப்​பட்​டுள்​ளன.

அனல் மின் நிலை​யங்​களின் எரிபொருள் தேவைக்​காக 3.517 மில்​லியன் டன் நிலக்​கரி கொண்டு செல்​லப்​பட்​டதன் மூலம் அதி​கபட்​ச​மாக ரூ.346.42 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது.

இது மொத்த சரக்கு வரு​வாயில் 56 சதவீதம் ஆகும். ஹூண்​டாய், ரெனால்ட் நிசான், ஓலா, டிவிஎஸ் போன்ற முன்​னணி நிறு​வனங்​களின் மோட்​டார் வாக​னங்​கள் மற்​றும் தொழில்​துறை உபகரணங்​கள் (370 சரக்கு ரயில்​கள் மூலம்) கையாளப்​பட்​டதில் ரூ.122.64 கோடி வரு​வாய் ஈட்​டப்​பட்​டுள்​ளது. (இதில் வாக​னங்​கள் மூலம் மட்​டும் ரூ.90.62 கோடி கிடைத்​துள்​ளது.

உள்​நாடு, ஏற்​றுமதி-இறக்​குமதி கன்​டெய்​னர்​களால் ரூ.76.76 கோடி வரு​வாயும், பெட்​ரோலியப் பொருட்​களால் ரூ.37.03 கோடி, உரங்​களால் ரூ.22.90 கோடி உணவு தானியங்​களால் ரூ.6.32கோடி வரு​வாயும் ஈட்​டப்​பட்​டுள்​ளன.

பிராந்​திய பொருளாதார வளர்ச்​சியை ஊக்​கு​விக்​கும் வகை​யில் நம்​பக​மான சரக்​குப் போக்​கு​வரத்து சேவை​களை வழங்க சென்னை கோட்​டம் உறுதி​யுடன் செயல்​படுவ​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.618 கோடி வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை
கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு கூலி, அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in