காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் மாற்றம்: நவ.1 முதல் எம்ஆர்பி விலையுடன் சேர்த்து ரூ.10 வசூல்

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் மாற்றம்: நவ.1 முதல் எம்ஆர்பி விலையுடன் சேர்த்து ரூ.10 வசூல்
Updated on: 
1 min read

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழகம் முழு​வதும் மது பாட்​டில்கள் திரும்பப் பெறப்படுகின்றன.

டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்​கும்​போது, அதி​கபட்ச சில்​லறை விலை​யுடன் கூடுதலாக ரூ.10 சேர்த்து வசூலிக்​கின்​றனர். காலி பாட்​டிலை திரும்ப கொடுத்​ததும் அந்த தொகை திருப்​பித் தரப்​படு​கிறது.

சில இடங்​களில் பாட்​டிலை திருப்​பிக் கொடுத்​தால் 10 ரூபாய் திருப்பி தரப்​படுவதில்லை என்ற குற்​றச்​சாட்டு இருந்​தது.

இதற்​கிடையே, கடந்த செப்​டம்​பர் மாதம் மது பாட்​டில்​களுக்கு சுற்​றுச்​சூழல், சமூக நல வரியை தமிழக அரசு விதித்​தது.

மதுபாட்​டில்​களை மறுசுழற்சி செய்ய அல்​லது பாது​காப்​பாக அகற்ற இந்த வரி வரு​வாய் பயன்​படுத்​தப்​படும் என்று கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில் நவ.1-ம் தேதி மது பாட்​டில் விலை​யுடன் கூடுதலாக சுற்​றுச்​சூழல் மற்​றும் சமூக நல மேல் வரியாக ரூ.10 சேர்த்து வசூலிக்க டாஸ்​மாக் நிர்​வாகம் உத்​தர​விட்​டுள்​ளது.

தனியாக காலி பாட்​டில் திட்​டத்​துக்கு பணம் வசூலிக்​ககூடாது. காலி பாட்​டில்​களை திரும்ப பெற தானியங்கி இயந்​தரம் அறி​முகம் செய்​யப்​பட உள்​ளது.

அது​வரை காலி பாட்​டில்​களை திருப்​பிக் கொடுப்​போரிடம் ரூ.10-ஐ திருப்பி தர வேண்​டும் என டாஸ்​மாக் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் மாற்றம்: நவ.1 முதல் எம்ஆர்பி விலையுடன் சேர்த்து ரூ.10 வசூல்
பதிவுத் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: மாதிரி பதிவு மையங்கள் குறித்து தமிழக அரசு விளக்கம்

X