புத்தக கொள்முதல் முறைகேடு புகார்: கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

கோவை பெரியார் அறிவுலகத்தில் உள்ள 3-வது தளத்தில் இயங்கும் நிர்வாகப் பிரிவு அலுவலகத்தில் சோதனை நடத்திய கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

கோவை பெரியார் அறிவுலகத்தில் உள்ள 3-வது தளத்தில் இயங்கும் நிர்வாகப் பிரிவு அலுவலகத்தில் சோதனை நடத்திய கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

படங்கள் : ஜெ.மனோகரன்

Updated on: 
1 min read

கோவை: புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு புகாரை ஒட்டி, கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் கடந்த மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

தரைத்தளம் மற்றும் 7 தலங்களுடன் கூடிய இந்த வளாகத்தில் நூலகங்கள் அறிவியல் கட்டமைப்புடன் கூடிய வளாகங்கள் கூட்டரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயர்களில் போலியான நூல்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தன. மாநிலம் முழுவதும் இந்த புகார் விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பெரியார் அறிவுலகம் நூலகத்தின் நான்காவது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவிலும், ஐந்து மற்றும் ஆறாவது தளங்களில் உள்ள ஆங்கில நூல்கள் பிரிவுகளிலும் வைக்கப்பட்டிருந்த மேற்கண்ட பதிப்பகத்தில் 1,800 நூல்கள் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று (நவ.10) சோதனை நடத்தி வருகின்றனர்.

டிஎஸ்பி இம்மானுவேல் ஞானசேகர் தலைமையிலான கோவை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ஐந்து பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அலுவலகத்தில் 3-வது தளத்தில் உள்ள நிர்வாகப் பிரிவு அலுவலகத்தில் இந்தச் சோதனையை நடத்தி வருகின்றனர். நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிவதற்காக இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p>கோவை பெரியார் அறிவுலகத்தில் உள்ள 3-வது தளத்தில் இயங்கும் நிர்வாகப் பிரிவு அலுவலகத்தில் சோதனை நடத்திய கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார்.</p></div>
கரூர் அருகே சாலை மையத்தடுப்பில் கார் மோதி விபத்து: 5 பேர் காயம்

X