கரூர் அருகே சாலை மையத்தடுப்பில் கார் மோதி விபத்து: 5 பேர் காயம்

கரூர் அருகே சாலை மையத்தடுப்பில் கார் மோதி விபத்து: 5 பேர் காயம்

படங்கள்: க.ராதாகிரு ஷ்ணன்

Updated on: 
1 min read

கரூர்: கரூர் அருகே சாலை மையத்தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானதில குழந்தை உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் மூலப்பாளையத்தைச் சேர்ந்தவர் கிஷோர் (30). நிதி நிறுவன அதிபர். இவர் மனைவி கவின்ஷா (26). கும்பகோணத்தில் உள்ள கவின்ஷாவின் தாய், தந்தை வீட்டில் தீபாவளி கொண்டாடிவிட்டு ஈரோடு திரும்பிச் செல்லும் வழியில் கரூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று (நவ.10) காரில் வந்துள்ளனர்.

படங்கள்: க.ராதாகிரு ஷ்ணன்

காலை 7 மணி அளவில் கரூர் சுங்கவாயில் - திருமாநிலையூர் இடையே சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பட்டை இழந்து, தனியார் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள சாலை மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. கவின்ஷா கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மற்றவர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான கார் மேலும் தீப்பிடிக்காமல் இருக்க பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, கார் மீது தீப்பிடிக்காமல் இருப்பதற்கான பவுடரை தெளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், விபத்து குறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் அருகே சாலை மையத்தடுப்பில் கார் மோதி விபத்து: 5 பேர் காயம்
திருச்செந்தூரில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடக்கம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம்

X