“அமைச்சர் மரிய வில்சன் இயேசுநாதர் கூறிய அனைத்தையும் பின்பற்றுகிறாரா?” - அர்ஜுன் சம்பத் கேள்வி

பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சுவாமி தரிசனம் செய்தார்.

பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சுவாமி தரிசனம் செய்தார்.

Updated on
1 min read

திருவள்ளூர்: “தமிழ் மொழி குறித்த விவாதத்தின் போது அமைச்சர் மரிய வில்சன் கிறிஸ்தவ மதத்தை இணைத்து பேசியது தவறான முன்னுதாரணம்’’ என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் தெரிவித்ததாவது: நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற விடாமல் திமுக அரசு தடுத்து வந்தது போல, திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக தற்போதைய தவெக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் தமிழ் மொழி குறித்த விவாதத்தின் போது, நிதி அமைச்சர் மரிய வில்சன் கிறிஸ்தவ மதத்தை இணைத்து பேசியது தவறான முன்னுதாரணம். இந்த கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அமைச்சர் மரியவில்சன் பேசிய போதே சபாநாயகர் கண்டித்திருக்க வேண்டும். முதலமைச்சர் உரிய அறிவுரை வழங்கி இருக்க வேண்டும்.

பிறப்பிலேயே கிறிஸ்தவன் என கூறும் அமைச்சர் மரிய வில்சன் இயேசுநாதர் கூறிய அனைத்தையும் பின்பற்றுகிறாரா? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுகிறாரா? சகோதரனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் எதற்காக உருட்டு கட்டையை எடுத்துக்கொண்டு சென்றார்? தனது கருத்துக்கு அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சுவாமி தரிசனம் செய்தார். </p></div>
எஃப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in