Published : 01 Jun 2023 06:11 AM
Last Updated : 01 Jun 2023 06:11 AM
சென்னை: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு, சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் உடைமைகள் திருடுபோகின்றன. அதேபோல, ஏசி சாதனங்கள், ஆக்சிஜன் கட்டமைப்புகளில் உள்ள ‘காப்பர்' குழாய்களும் திருடப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன் மருத்துவர் மீது, நோயாளி ஒருவர் தாக்குதல் நடத்தினார். மருத்துவமனையில் போதிய காவலர்கள் இல்லாததே இதற்குக் காரணம்.
எனவே, விபத்து சிகிச்சை, அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை, நச்சு முறிவு தீவிர சிகிச்சை, இதய நாள சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள், உள்நோயாளி, புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு ஆகிய இடங்களுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT