Published : 22 May 2023 04:46 AM
Last Updated : 22 May 2023 04:46 AM

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உள் தமிழக மாவட்டங்களில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

மே 21-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 7 செ.மீ., தருமபுரி மாவட்டம் பென்னாகரம், திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x