Published : 16 May 2023 06:36 AM
Last Updated : 16 May 2023 06:36 AM
சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள கள்ளச் சாராய வியாபாரிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம், ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிரான வேட்டை தொடங்கி உள்ளது.
இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2 நாட்களாகதமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 4,943 லிட்டர் ஊரல்அழிக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 ஐஎம்எஃப்எல் பாட்டில்கள் மற்றும் 218 லிட்டர் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தாண்டு இதுவரை 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4,534 பேர்பெண்கள். இந்தாண்டு இதுவரை2 லட்சத்து 55 ஆயிரத்து 78 லிட்டர்கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள் ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மலை வனப்பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT