Published : 15 May 2023 06:05 AM
Last Updated : 15 May 2023 06:05 AM

திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு திருமாவளவன் வர வேண்டும்: வானதி சீனிவாசன்

கோவை: சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி, பாஜக கூட்டணிக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வர வேண்டும் என, பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை நேற்று திறந்துவைத்த பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம். ஆட்சி அமைக்க முடியாததற்கான காரணத்தை கட்சி ஆராயும். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பை பூரணமாக நிறைவேற்றும் வகையில் கர்நாடக தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்துகிறது. தோல்விக்கு குறிப்பிட்ட காரணம் என்று எதையும் சொல்ல முடியாது.

திராவிட நிலப்பரப்பு என்பதை வார்த்தை அலங்காரத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்துகிறார். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். திமுக எத்தனை முறை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இரட்டை இலக்கம் கூட இல்லாமல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்துள்ளனர். பாஜகவின் வழக்கமான வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. கர்நாடகாவில் சி.டி. ரவி தோல்வியுற்றதால் தமிழ்நாட்டை வழிநடத்த முடியாது என சொல்ல முடியாது.

அண்ணாமலை அவர் பங்களிப்பை மிக சிறப்பாக செய்துள்ளார். மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவுக்குதான் மக்கள் வாய்ப்பளிப்பார்கள்.

திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்பதை கடந்த 2 ஆண்டுகளாக பார்த்து வருகிறார். எனவே, திருமாவளவன் சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். வாரிசு அரசியல், குடும்ப அரசியல்தான் திராவிட மடல் என திமுகவினர் நிரூபிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x