Published : 12 May 2023 07:26 PM
Last Updated : 12 May 2023 07:26 PM

கருணாநிதி நூற்றாண்டு விழா | மே 20-ல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து விவாதிக்க வரும் மே 20-ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவின் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள் செய்தியில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் 20.05.2023 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும்.

அதுபோது உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த கூட்டத்தில் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்து விவாதிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x