Published : 09 May 2023 06:30 AM
Last Updated : 09 May 2023 06:30 AM
சென்னை: தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர்மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்து, ‘முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2023’-க்கான வீரன் சின்னம், கருப்பொருள் பாடல் மற்றும் டி-ஷர்ட் ஆகியவற்றை வெளியிட்டார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம்தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியை முதல்வர் ஸ்டாலின்வணக்கம் தெரிவித்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைவரையும்போல நானும் தோனியின் ஒரு மிகப் பெரிய ரசிகன். தமிழகம் தத்தெடுத்துக் கொண்ட மகனும், சென்னையின் செல்லப் பிள்ளையுமான தோனி,சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்துவிளையாடுவார் என விரும்புகிறேன்.
எளிமையான பின்னணியில் இருந்து வந்த தோனி, தனதுகடின உழைப்பால் நாட்டின் அடையாளமாக மாறி இருக்கிறார். கிரிக்கெட்டில் மட்டுமின்றி, அனைத்து விளையாட்டுகளிலும், தமிழகத்தில் இருந்து இன்னும் பல தோனிகளைஉருவாக்க விரும்புகிறோம்.
தமிழகத்தில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியானது மிகப்பெரிய பிரம்மாண்டத்தை இரண்டு ஆண்டுகளில் அடைந்திருக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொறுப்பில் விளையாட்டுத் துறையானது மேலும் மாபெரும் எழுச்சியைப் பெற்றுள்ளது.
மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்காக பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை என்ற அறக்கட்டளையை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளையாட்டுகளுக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தில் மக்களுடனும் பெருநிறுவனங்களுடனும் இணைந்துசெயல்படும் ஒரு முன்னெடுப்பாக இது அமைந்துள்ளது.
இங்கே அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டதைப்போல, ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன்’ தொடங்கியபோது, முதலமைச்சர் என்கிற முறையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் நான் ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியதாக அவர் குறிப்பிட்டு சொன்னார். இங்கேயும் எதிர்பார்ப்பதாக சொன்னார்.
இந்த அமைப்புக்கும் என்னுடைய தனிப்பட்ட முறையில் ரூ.5 லட்சம் நான் வழங்குகிறேன் என்பதைத் தெரிவித்து, இந்த அறக்கட்டளை நிதிகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இந்த அறக்கட்டளை மூலமாக அனைத்து விளையாட்டுகளும் அனைத்து விளையாட்டு வீரர்களும்பயன்பெற வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT