Published : 03 May 2023 04:13 AM
Last Updated : 03 May 2023 04:13 AM
கிருஷ்ணகிரி: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழக எல்லையில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் 10-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக எல்லையில் உள்ள நாச்சிக்குப்பம், கர்னூர், கோட்டையூர், தளி, ஜவளகிரி, சொக்காபுரம், பேரிகை, முகலப்பள்ளி, பாகலூர் மற்றும் கக்கனூர் கிராமங்களில் 12 டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் வரும் 10-ம் தேதி நள்ளிரவு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கக்கனூர், சேவகானப்பள்ளியில் மதுக்கூட உரிமம் பெற்றுள்ள 2 ஓட்டல்களில் மது விற்பனை நடைபெறாது. உத்தரவை மீறி மதுக்கடைகளைத் திறந்தாலும், விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT