Published : 09 Sep 2017 09:01 AM
Last Updated : 09 Sep 2017 09:01 AM

இயற்கை மருத்துவ பட்டமேற்படிப்பு நுழைவுத் தேர்வு: அக்டோபர் 21-ம் தேதி நடக்கிறது

இயற்கை மருத்துவப் பட்டமேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:

சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப் பில் (எம்டி - யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.tnhealth.org என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் 28-ம் தேதியாகும். நுழைவுத் தேர்வு வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும். இதுதொடர்பான விவரங்களைச் சுகாதாரத் துறை யின் இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள லாம்.

இவ்வாறு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x