எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு: சீரான வேகத்தில் நடைபெறும் பணிகள்

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு: சீரான வேகத்தில் நடைபெறும் பணிகள்
Updated on
1 min read

சென்னை: எழும்பூர் ரயில்நிலையத்தின் மறுசீரமைப்பு பணி தொடங்கி, சீரான வேகத்தில் நடைபெறுவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த ஆண்டு அக்டோபரில் வழங்கப்பட்டது. தற்போது, பணிகள் தொடங்கி, சீரான வேகத்தில் நடைபெறுகிறது. காந்திஇர்வின் சாலை ஓரத்தில் உள்ளகுடியிருப்புகளை இடிக்கும் பணிநிறைவடைந்துள்ளது.

நவீனவாகன நிறுத்துமிடம் (மல்டிலெவல் கார் பார்க்கிங்) மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகில் உள்ள பார்சல் அலுவலகம் ஆகிய இடங்களில் பூமியின் தாங்கும் திறன்தொடர்பாக சோதனை மற்றும்பெருந்திட்டம் சரிபார்ப்பு ஆகியவை முடிந்துள்ளன.

புவி தொழில்நுட்ப ஆய்வுக்காக, ஆள்துளை கிணறு தோண்டும் பணி நடைபெறுகின்றன. தொலைதொடர்பு துறையின் கேபிள்கள் இடமாற்ற பணியும் நடைபெற்று வருகிறது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in