Published : 09 Sep 2017 08:17 AM
Last Updated : 09 Sep 2017 08:17 AM

‘புதுச்சேரி சொகுசு விடுதி வாடகை ரூ.30 லட்சம்’

புதுச்சேரி சொகுசு விடுதிகளில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியதற்கான வாடகைக் கட்டணம் ரூ. 30 லட்சம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இணைந்ததை அடுத்து தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்தார். இவர்கள் புதுச்சேரிக்கு கடந்த மாதம் 22-ம் தேதி வந்தனர். நேற்று முன்தினம் இரவு கர்நாடகம் புறப்பட்டு சென்றனர். புதுச்சேரியில் ரிசார்ட் மற்றும் நட்சத்திர விடுதியில் 20 எம்எல்ஏக்களும் தங்கியிருந்ததற்கு ரூ.30 லட்சத்து 40 ஆயிரம் வாடகையாக அளிக்க வேண்டும் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளன.

இதுகுறித்து சொகுசு விடுதிகள் தரப்பில் கூறும்போது, பில்கள் அனைத்தும் எம்எல்ஏக்கள் பெயரில் தனித்தனியாக போடப்பட்டுள்ளது. மொத்தம் 17 நாட்களுக்கு ரூ.30 லட்சத்து 40 ஆயிரம் ரிசார்ட் மற்றும் நட்சத்திர விடுதிக்கு அளிக்க வேண்டும். இதில் முதல் தடவை தங்கியிருந்த வாடகை ரூ. 5 லட்சம், நட்சத்திர விடுதி கட்டணம் ரூ.7 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரூ. 18 லட்சத்து 40 ஆயிரத்துக்கு பில் தற்போதுதான் தரப்படுகிறது. அதையும் செலுத்தி விடுவோம் என தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x