Published : 01 Mar 2023 12:34 PM
Last Updated : 01 Mar 2023 12:34 PM

சென்னை மெட்ரோ ரயிலில் பிப்ரவரி மாதம் மட்டும் 63 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில் | கோப்புப் படம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் பிப்ரவரி மாதம் மட்டும் 63 லட்சம் பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கடந்த கடந்த மாதம் 01.02.2023 முதல் 28.02.2023 வரை மொத்தம் 63,66,282 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,668 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023,பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 20,20,027 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி 39,85,113 பயணிகள் பயணித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதம் மட்டும் 66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பிப்ரவரி மாதம் 63 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பிப்ரவரி மாதம் 28 நாட்கள் என்பதால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x