Published : 01 Mar 2023 11:55 AM
Last Updated : 01 Mar 2023 11:55 AM

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். குன்றாத நலத்துடன் இன்னும் பல்லாண்டுகள் மக்கள் பணியை மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: இன்று 70-ம் பிறந்தநாள் காணும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பொதுவாழ்வு பணி தொடர வாழ்த்துகிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர் , திமுக தலைவர், அன்பு சகோதரர் மு.க. ஸ்டாலின், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழகத்தை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழகத்தின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர் மு.க.ஸ்டாலின் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x