Published : 01 Mar 2023 12:24 PM
Last Updated : 01 Mar 2023 12:24 PM

ஆஸ்திரேலியாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞர் அடையாளம் தெரிந்தது: தஞ்சையை சேர்ந்தவர்

சுட்டு கொல்லப்பட்ட முகமது ரஹமத்துல்லா

தஞ்சாவூர்: ஆஸ்திரேலியாவில், போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்ததுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மைப் பணியாளரை ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால், துாய்மைப் பணியாளரை ரத்தக் காயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், அந்த இளைஞர் கத்தியுடன், அங்குள்ள காவல் நிலையத்திலுள்ள போலீஸாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 2 போலீஸார் அந்த இளைஞரை 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையில், படுகாயமடைந்த அந்த இளைஞரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சிட்னி போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த சையது அகமது மகன் முகமது ரஹமத்துல்லா(32), என்பதும், பிரிட்ஜிங் விசாவில், கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு வந்து, உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முகமது ரஹமத்துல்லாவால் தாக்கப்பட்டு காயமடைந்த துாய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிராம்பட்டினம் போலீஸார், விசாரணை நடத்தி வரும் சூழலில், இறந்த ரஹமத்துல்லாவிற்கு, தாய் ஆமினாம்மாள், அண்ணன் அப்துல்ஹனி சென்னையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருவதும், ஒரு தங்கை இருப்பதும் தெரியவந்தது. ரஹமத்துல்லா இறந்த தகவலறிந்த தாய், தங்கை உள்ளிட்ட குடும்பத்தினர் சென்னைக்கு சென்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x