Published : 16 May 2017 08:57 AM
Last Updated : 16 May 2017 08:57 AM

போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் அனைத்து கட்சியும் களம் இறங்கும்: ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை

போக்குவரத்துத் தொழிலாளர் களின் போராட்டத்தை அரசு ஒடுக்க நினைத்தால், அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டத் துக்கு ஆதரவாக களமிறங்க வேண்டிய நிலை உருவாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது: அரசியல் ஆதாயத் துக்காக போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத் தத்தைத் தொடங்கியுள்ளதாக மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. ஓர் அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமாக அதிமுக அரசு உள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட் டத்துக்கும், அதனால் மக்களுக்கு நேரிடும் சிரமங்களுக்கும் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண் டும். வெளியாட்களை வைத்து பேருந்துகளை இயக்கினால், விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

போக்குவரத்துத் தொழிலாளர் களின் போராட்டத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமல், போராட்டத்தை அரசு ஒடுக்க நினைத்தால், அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்க வேண்டிய நிலை உருவாகும்.

காவிரி விவகாரம், நீட் தேர்வு என மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் முயற்சியையும், ரேஷன் கடைகளை அழிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.

இந்தச் சூழலில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக் கவும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும் பிரச்சார இயக்கம், தர்ணா, ஆர்ப்பாட்டம் போன்ற இயக்கங்களை வரும் 21-ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x